பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டுக நின்திறம் கலைஞ!என் ஆணே வினைகள் முடியுமுன் விழைவோட் கான முனைவதும் குற்றம்இம் மொழியுமென் ஆணை’ எனமொழிங் திருந்தனன் இறையவன் அரியனே : சுழல்மனம் துணிந்தது மனம்நிறை துயரினன் மயங்கினன் செய்வகை யாதென அறிகிலன் யானென் செய்குவென் தீதுறு மோ?’ எனச் சிந்தனை செய்தனன்; மயிலியின் திருவுரு மனக்கண் தோன்றலும் வெயிலவன் போல வெண்முகம் சிவந்தது; 'குறிஞ்சி நாட! நீ கொடுத்தஇவ் வாணையை விரைந்து முடித்துங்ான் வெற்றியுங் கொள்வேன் எனுமொழி கூறி ஏகினன் சிற்பி; வினைத்திறன் வெற்றி காதல் உணர்வு கருத்தினில் உக்தி மோதி எழுதர முனைந்தனன் உழைப்பால் மலையைக் குடைந்தனன் மாபெருங் கால்வாய் அலையொடு பாய்ந்த(து) அதனிரு கரையில் உலகம் உவப்ப உயர்பெருஞ் சிலையெலாம் படைத்தனன் ; ஆண்டுகள் பலப்பல கடந்தன உடலந் தளர்ந்தனன் உள்ளங் தளர்ந்திலன் தடந்தோள் வீரன் தலைநிமிர்ந்திருந்து வெற்றிச் செருக்கொடு விழித்து நோக்கினன் பெற்ற களிப்பால் பெருமூச் செறிந்தனன் சிற்றுளி கைவிரல் பற்றி யிருந்தது; காதற் கனவு பலித்திடக் கண்டேன் ஏதுக் கினித்துயர் ? இவ்வுல காள்வேன் நானும் அவளும் வானம் பாடி 10 225 230 335 240 245