பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலப் பறந்து வானில் திரிவோம் எனப்பல கற்பனை எண்ணி கின்றனன் : 250 சூழ்ச்சி வென்றது சினப்படு வேந்தன் செய்ததோர் சூழ்ச்சியால் ஆங்கோர் கிழவி அழுது வந்தனள் "தீங்குனக் கென்ன ? செப்பெனச் செப்பினள் வடிவேல் மன்னன் மகளென வந்த கொடியிடை மயிலி மடிந்தனள் என்ருள்; 355 அலறினன் கதறினன் ஐயகோ என்றனன் 'பலபகல் இரவுகள் பாடுபட் டுழைத்ததால் உறுபயன் இதுவோ ! உலகம் முடிந்ததோ ! இருளெனைச் சூழ்ந்ததோ ! இனிஉயிர் விழைவதோ !” கலைஞன் புலம்பல் காடெலாம் பரவி 360 மலையகம் மோதி எதிரொலித் தெழுந்தது - மாதின் சிலைபால் ஒடினன் மயங்கி மோதினன் முட்டினன் மோனத் திருக்கும் காதற் சிலையே! கண்ணிர்த் துளியால் குளித்திடு 1 என்னுயிர் குடித்திடு விரைவாய் ! 265 யாண்டுச் சென்றனே? யாது எண்ணினே? ஆண்டு வருவேன் ஆருயிர்க் காதலி !’ என்றவன் புலம்பிக் குன்றினில் ஏறி நின்றனன் வானே நிமிர்ந்து நோக்கினன் காற்றில் கலந்தான் விரலுறு சிற்றுளி வீசி எறிந்தனன் 27'O மயிலி மயிலி மனங்கவர் மயிலி ாயிலி நானும் வருவேன்' என்று பலகால் அலறிப் பாய்ந்தனன் கீழே லேயாய் கிற்பவள் சீறடி வீழ்ந்தனன் 11