பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதறலும் உயிரும் காற்றுடன் கலந்தன. சிதறிய குருதி சிலையெலாம் நனைத்தது கவலைகள் தீர்ந்தான் காதலும் தீர்ந்தான்; திவலைகள் அலறின சிலைகளும் அலறின குன்றுகள் அலறின குகைகளும் அலறின பறவைகள் அலறின பாரெலாம் அலறின : அவலப் பாடல் மாய்ந்தனன் சிற்பி என்ருெரு மாற்றம் தோய்ந்தது செவியில் துடித்தனள் மயிலி ‘ஐயகோ ஐயக்ோ ஆர்செய் சூழ்ச்சி ? வையகம் பொறுக்குமோ! வானகம் இருக்குமோ ! உண்மைக் காதலே உலகம் வெறுத்ததோ ? பெண்மைக் கிங்கே பெருந்துயர் தானே !' என்றனள் ஏங்கி ஏகினள் குறிச்சிக் குன்றினில் ஏறிக் குதித்தனள் கீழே சிலையின் அருகே அவளும் சேர்ந்தனள் கலையும் உயிருடன் காதலும் தீர்ந்தனள் மலையும் மரமும் மலைத்து கின்றன : அழும்ஒலி போல அவலம் பாடி இழுமெனும் ஒலியால் இயங்கிய(து) ஆறே. 12 275 380 285 290