பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் I lெளம்ங்றைந்த தமிழ்மொழிக்கு விரும்பிச் சாத்தன் வழங்குமணி மேகலேயில், அவளுக் கென்றே உளம்நிறைந்து முப்பொருளால் இளங்கோச் சேரன் உருவாக்கித் தந்துமகிழ் சிலம்பில், கம்பன் பழங்கதையை மெருகேற்றிப் பாரோர் போற்றப் பாவையவள் மகிழவென்று தந்த நூலில், களங்கமின்றிக் கோவைசெய்து தேவன் தந்த கலைசிந்தா மணியிலும்,நான் எழிலேக் கண்டேன் 2 விண்முட்டும் கோபுரத்தில், அங்குச் சாந்து வினவல்லான் அமைத்தசுதைப் பாவை தன்னில், கண்ணெட்டும் போதாதோ எனுமா ருங்குக் கற்றச்சன் வடித்தகருங் கல்லின் சிற்பம், பண்ணுெட்டும் யாழேந்தும் கல்விப் பாவை பரிந்துகடம் புரிந்தருளும் தோற்றங் தன்னை எண்ணட்டும் இங்கிருந்தே என்ற நோக்கில் எழுப்புகலைக் கூடத்தில் எழிலைக் கண்டேன். 28