பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அச்சத்தார் முட்புதராய்

அதனடுவே கனியானுள் !

ஆவலெலாம் பாழன்றே !

இளம்பருவ எழில்நிறைந்த

பச்சைமயில் இவளன்றே !

பாவையிவள் நாள்முழுதும்

பதியின்றித் துயருறவோ !

அறமிதுவோ! விதவைஎனும்

கொச்சைமொழி இல்லாமல்

செய்திடுவேன் என்றுறுதி

கொண்டுன் றன் விருப்பம்யா

தெனவினவக் கோதையவள்

3

சிந்துகின்ற நீர்துடைத்து

"விருப்பந்தான் ஆனுலும்

சீறிடுவர் உறவினர்தாம்

சாதியினில் ஒதுக்கிடுவர்

நிந்தனைகள் பேசிடுவர்

நேர்கிற்க ஆற்றலிலேன்

நீறுகிப் போகாதோ

நேர்மையற்ற சட்டமெலாம்

நொந்துழலும் என் ரிலையை

அறியாது பெற்ருேரும்

நோயென்று செப்புகின்ருர்

செய்வதெதும் நானறியேன்

இந்தகிலை உள்ளளவும்

எப்படிநான் ஒப்பிடுவேன்”

என்றுருகிச் சொல்லிவிட்டு

முகமாறிப் போய்விட்டாள்.

65