பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏது வாழ்வு?

அன்புற்றுப் பசிப்பிணியாற் கிடைத்த சோற்றைத் துடிதுடித்து விழுங்குகிருன் அந்தச் சோற்றில் மென் புழுவோ பிறபொருளோ கிடப்ப தோரான் மேதினியில் இயற்கை எழில் காணு கில்லான் கன்னெறியிற் கோலுான்றி நடக்கும் போழ்து காலிடறி விழ்கின் ருன் பெற்ற கண்கள் கன்னிலையில் இல்லாத தாலே இந்த கானிலத்திற் பிச்சையலால் ஏ.அ வாழ்வு ? --

காலொன்றும் கையொன்றும் அற்ருன், மானம் கந்தல்மிகு துணிகொண்டு காப்பான், மூங்கிற் கோலொன்றின் துணைகொண்டு நகர்வான், பற்றுக் கோடொன்றும் வாழ்வதற்கிங் கில்லான்; அன்ன்ை மேலொன்றும் பெருநோயின் கொடுமை தாங்கி வெளியிடத்தே வாழ்கின்ருன் , அந்த வாழ்வு மேலென்று காக்கஉயிர் விழைந்தால் வாழ விழைந்தவற்குப் பிச்சையலால் ஏஅ வாழ்வு உ

ll