பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனிச்சத்தின் மலர்மோப்பக் குழையும் என்பர் அன்பன்முகம், உளம்திரிந்து கினேத்தால் வாடும் மனத்திருக்கும் உண்மையினே கின்பால் சொன்னேன் மாதரசே ! அடைக்கம்மை கல்லாய் ! என்றன் இனித்திருக்கும் நண்பன்முகம் சுருங்கா வண்ணம் இல்லறத்தைப் பேணிடுக இனிய பேசி * மனக்கினிய செய்திடுக குறிப்ப றிந்து மனேவிளக்காய் அவன் மகிழ வாழ்க வாழ்க Hå.

ஒருவர்பிழை பொறுத்திடுதல் இருவர் நட்பாம் உயர்நூல்கள் பயின் ருலும் வாழ்க்கை ஏட்டில் ஒருவருளம் பிறர்பயில வேண்டும் ; வேண்டின் உண்மைநிலை இன்பநிலை காணல் வாய்க்கும்; பெருகிடுகல் வாழ்வுக்கு மனைவி மக்கள் பேரணியாம் மங்கலமாம் என்பர் ஆன்ருேர் ; அருகிருந்து திறந்துள்ளம் அளவ ளாவும் அன்புளத்தன் உயிர்கண்பன் ஒளிவி ளக்காம். ச

உளமொத்த இரட்டையராய் உடன்பி றப்பாய் உணர்வொன்ருய்ப் பழகிவரும் நண்பன் தன்னே உளமொத்த துணையாகக் கொள்க என்றே உன்கையில் அடைக்கலமாத் தந்தேன் ; எங்கள் உளமொத்த வாழ்வேபோல் வாழ்க அன்பை உயிரென்று போற்றிடுக இன்பம் பொங்க வளமிக்க தமிழ்பாடும் என்றன் நாவால் வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வாழ்த்துகின்றேன்

சிந்தாமணி தமிழண்ணல் திருமண விழாவில் பாடப்பெற்றவை

T3