பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 காட்டவே வந்துள்ளது. இவ்வாறு இனம் விலக்க வராமல், ஒரு பொருளின் சிறப்பைக் காட்டவரும் அடைமொழி இனமில்லா அடைமொழி ஆகும். (திங்கள்-சந்திரன்) எனவே அடைமொழி, இனமுள்ள அடை மொழி, இனமில்லா அடைமொழி என இருவகைப் படும். பொருள், இடம், காலம், சினே, குணம், தொழில் ஆகிய அறுவகைப் பெயர்களும் இன முள்ள அடைமொழிகளாகவும், இனமில்லா அடை மொழிகளாகவும் வரும். இனமுள்ள அடைமொழி 1. பொருள் - நெய்க்குடம் (பாற்குடம்-இனம்) 2. இடம் - வயல்நெல் (மலைகெல்-இனம்) 3. காலம் - ஆடிக்கார்த்திகை (தைக்கார்த்திகைஇனம்) 4 இன - பூமரம் (பழமரம்-இனம்) 5. குணம் - செந்தாமரை (வெண்டாமரை-இனம்) 6. தொழில் - ஆடுபாம்பு (ஆடாத பாம்பு-இனம்) கெய்க்குடம், வயல்கெல், ஆடிக்கார்த்திகை, பூமரம், செந்தாமரை, ஆடுபாம்பு என்ற சொற். ருெடர்களில் உள்ள கெய், வயல், ஆடி, பூ, செம்மை, ஆடு(தல்) என்ற அறுவகைப் பெயர் களும், இனம் விலக்க வந்த அடைமொழிகளாகும். எனவே, இவை இனமுள்ள அடைமொழிகள் எனப்படும். 7