பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 ஆறுடன், முதற்குறை, இடைக்குறை, கடைக் குறை என்ற மூன்றும் சேர்த்து ஒன்பது வகைப் படும். அவை வருமாறு: 1. வலித்தல் விகாரம் 'குறுத்தாட் பூதஞ் சுமந்த' குறுமை + தாள் = குறுந்தாள் எனப் புணர வேண்டும். அங்ங்னம் புணராது ந் என்ற மெல் லெழுத்து த் என்ற வல்லெழுத்தாக விகாரப்பட் டுள்ளது. எனவே, வலித்தல் விகாரம் எனப்படும். 2. மெலித்தல் விகாரம் தண்டையி னினக்கிளி கடிவோள்' இத் தொடரில் தட்டை எனற்பாலது, தண்டை என ட் என்ற வல்லெழுத்து ண் என்ற மெல் லெழுத்தாக விகாரப்பட்டுள்ளது. எனவே, இது மெலித்தல் விகாரமாகும். (தட்டை-கிளியோட்டும் கருவி.) 3. நீட்டல் விகாரம்

ஈசன் எந்தை இணையடி நிழலே'

இத் தொடரில் கிழலே எனற்பாலது கீழலே' எனக் குறில், கெடிலாக நீண்டு விகாரப்பட்டுள் ளது. எனவே, இது நீட்டல் விகாரமாகும். 4. குறுக்கல் விகாரம் 'திருத்தார் நன்றென்றேன் றியேன்' இத் தொடரில் தீயேன்” எனற்பாலது தியேன் என கெடில், குறிலாக விகாரப்பட்டுள்ளது. எனவே, இது குறுக்கல் விகாரமாகும்.