பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
9
இச் சொற்களில் உள்ள ல், ள் என்ற இரண்டு

மெய்யெழுத்துக்களையும் ஒலித்துப் பாருங்கள். அவற்றுள்,

ல் என்ற மெய்யெழுத்து, மேல்வாய்ப் பல்

லின் அடியை நாக்கின் ஒரமானது தடித்துப்

பொருந்தும் முயற்சியால் பிறப்பது தெரியவரும்.

ள் என்ற மெய்யெழுத்து, மேல்வாயை

நாக்கின் ஒரமானது தடித்துத் தடவும் முயற்சி

யால் பிறப்பது தெரியவரும்.

இலக்கண விதி: மேல்வாய்ப் பல்லின் அடியை

நாக்கின் ஒரமானது தடித்துப் பொருந்தும்

முயற்சியால், ல் என்ற மெய்யெழுத்தும், மேல்

வாயை நாக்கின் ஒரமானது தடித்துத் தடவும்

முயற்சியால், ள் என்ற மெய்யெழுத்தும்

பிறக்கும்.

அண்பன் முதலு மண்ணமு முறையின்
நாவிளிம்பு வீங்கி யொற்றவும் வருடவும்
லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும்.
(ந-நூற்பா 84.)
(வ, என்ற எழுத்தின் முயற்சிப் பிறப்பு)
நவ்வி

தெவ்வர்

இச் சொற்களில் உள் வ் என்ற மெய்

யெழுத்தை ஒலித்துப் பாருங்கள். அது, மேல்

வாய்ப் பல்லைக் கீழுதடு சென்று பொருந்தும்

முயற்சியால் பிறப்பது தெரியவரும்.

இலக்கண விதி: மேல்வாய்ப் பல்லைக் கீழுதடு

சென்று பொருந்தும் முயற்சியால், வ் என்ற

மெய்யெழுத்துப் பிறக்கும்.