பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 வீட்டுக்கு + காவல்= வீட்டுக்குக் காவல் 16. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வல்லினம் மிகும். விழி + புனல் = விழிப்புனல் 17. ஆரும் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும். வண்டு + கால்= வண்டுக்கால் 18 வன்ருெடர்க் குற்றியலுகரத்தின் முன் அல் வழி, வேற்றுமை ஆகிய ஈரிட்த்தும் வலி மிகும். இழுத்து+செல்-இழுத்துச் செல் (அல்வழி) ஆற்று-புனல் = ஆற்றுப்புனல் (வேற்றுமை) 19. மென்ருெடர்க் குற்றியலுகரத்தின் முன் வேற் றுமையில் வல்லினம் மிகும். நண்டு + கால் = நண்டுக்கால் 20. முற்றியலுகரத்தின் முன்னும் வேற்றுமை யில் வல்லினம் மிகும். கதவு+ தாள் = கதவுத் தாள் அரவு + தோல் = அரவுத் தோல் 21. அரை, பாதி என்னும் சொற்களின் முன் பண்புத் தொகையில் வல்லினம் மிகும். அரை - பலம் = அரைப்பலம் பாதி-பாக்கு= பாதிப் பாக்கு 22. தனிக்குற்றெழுத்தைத் தொடர்ந்து வரும் முற்றுகரத்தின் முன்னும், குறில் நெடில் இணைவின் முன்னும் வலிமிகும். நடு-பகல்=நடுப் பகல் பலா + பழம்=பலாப் பழம் 15