பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 புறத்துறுப்பாயும் ஒன்றும் பலவுமாகப் பின்னும் முன்னும் வருவனவற்றைப் பார்ப்போம். குழையன் (குழை + அன்) இங்கு, 'அன்' என்ற விகுதியிடைச்சொல் மட்டும், பெயரின் அகத்துறுப்பாய் வந்துள்ளது. நிலத்தினன் (கிலம்+த் + த் + இன் + அன்) இங்கு ‘த்-இன்-அன்' என முறையே இடை நிலையும், சாரியையும், விகுதியுமாகிய பல இடைச் சொற்கள் பெயரின் அகத்துறுப்பாய் வந்துள்ளன. உண்ணுய் (உண் + ஆய்) இங்கு ஆய்' என்ற விகுதியிடைச்சொல் மட்டும், வினையின் அகத்துறுப்பாய் வந்துள்ளது. நடந்தனன் (கட+த்(ர்) + த் + அன் + அன்) இங்கு,'த்-அன்-அன்' என முறையே இடைநிலை யும், சாரியையும்,விகுதியுமாகிய பல இடைச்சொற் கள் வினையின் அகத்துறுப்பாய் வந்துள்ளன. அதுமன் - கொன்னூர் இங்கு, மன்’ என்னும் இடைச்சொல்லும் கொன்’ என்னும் இடைச்சொல்லும் பெயருக்குப் பின்னும் முன்னும் புறத்துறுப்பாய்த் தனித்து வாதுளளன. அது மற்றம்ம - இனி மற்ருென்று இங்கு, மற்று-அம்ம’ என்ற இடைச்சொற் களும், மற்று-ஒன்று என்ற இடைச்சொற்களும் பெயருக்குப் பின்னும் முன்னும் புறத்துறுப்பாய்ப் பலவாக வாகதுளளன. -