பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 27–31. தொடர்நிலைச் செய்யுள் இப்பெருங்... --- 暫 து த : ............சாரல் சொற்பொருள் இப்பெரும் தேயத்து எங்கும்இந்தப் பெருமைபொருந்திய நாஞ்சில் நாடெங்கும், இரா. பகல் - இரவும் பகலும், தப்பினும் - வருதல் ஒழிந்தா ம் மாறி வந்தாலும், மாரி தன் கடன் - மழை தன்னு டைய கடமை, தவரு - தவறமாட்டா, கொண்மூ என்னும் - மே க ம் என்று சொல்லக்கூடிய, கொண்ட அமிழ்தினை - தான் கொண்டுள்ள அ மி ழ் த ம் போன்ற நீரை, அவ்வயின் கவிழ்த்தபின் - அவ் விடத்துக் கவிழ்த்திய பிறகு, செல் புழி - செல்லும்பொழுது, வடியும் நீரே - சிந்தி வழியும் அந்தச் சிறிய நீரே, நம் மிடிதீர் சாரல் - நம்முடைய பாண்டிய நாட்டின் வறுமை யைப் போக்குகின்ற மழைச் சாரலாகும். .ெ கா ள் க ல ம் - நீர் என்னும் பொருளைக் கொண்ட பாண் டம், - கருதது இந் நாட்டில் இரவும் பகலும் மாறிவந்தாலும் அல்லது வராது ஒழிந்தாலும் மழை பெய்தல் மட்டும் தவரு.து. மேகம் அங்கு மழை யைக் கொட்டி விட்டுத் திரும்பும்பொழுது சிந்தும் நீரே நம் வறு மையைப் போக்கும் மழையாகும். விளக்கம் மாரி தன் கடன் தவரு என்பது மழை அவ்வப் பருவங்களில் காலம் அறிந்து தப்பாமல் பெய்வது. மேகத்தை ஒரு பாண்டமாக உருவகம் செய்கிருர். அதனுள் நிறைய அமிழ்தம் இருக்கிறதாம். அந்த அமிழ்தத்தை நாஞ்சில் காட்டிலே அப்படியே கவிழ்த்துவிடுகிறதாம். அந்தப் பாண்டத்தின் வாயோரங்களில் கொஞ்சம் கொஞ்சம் வழியத்தானே செய்யும்? அவ்வாறு வழியும் நீர்தான் பாண்டிய நாட்டின் வறுமையைத் தீர்க்கிறதாம். வாயோரத்தில் வழியும் நீரே ஒருநாட்டின் வறு மையைப் போக்குகிற தென்ருல், பாத்திரத்திலிருந்த முழுவதை யும் கொட்டிக் கொண்ட நாஞ்சில் நாட்டின் வளம் கூறவும் வேண்டுமோ? நம் மிடி-இதில் நம் என்பது குடிலன் கூறுவது. அவன் பாண் டிய நாட்டான் ஆதலின் பாண்டிய நாட்டின் வறுமை எனப் பொருள் கூறப்பட்டது. இலக்கணம் இராப்பகல்-உம்மைத்தொகை. தப்பினும்-உம்மை எதிர்மறை. கொள்கலம்-வினைத்தொகை. மிடிதீர்-இரண்டாம் வேற்றுமைத் தொகை. தீர் சாரல்-வினைத்தொகை. o