பாரதம் 267 = கருதது o கண்ணன் கன்னன் கண்டு மகிழுமாறு நீலமேனியும் பஞ்சாயு தமும் தாங்கிய கைகளும் உடையவனகிக் கஜேந்திரனுக்குக் காட்சி யளித்த வடிவிலே காட்சியளித்தான். விளக்கம் கடலில் நீர் முகந்து செல்லும் மேகம் கருநிறமுடையதாக இருக்கும். யுடையவன். அதையும் தோற்கடிக்கக்கூடிய அவ்வளவு கரிய மேனி பஞ்சாயுதம் - சங்கு, சக்கரம், வில், வாள், கதை என்பன. கஜேந்திரன் என்னும் யானை அருச்சித்து வழிபட்டு வந்தது. நாடோறும் தாமரை மலரினல் வழக்கம்போல் ஒருநாள் மலர் பறிக்கக் குளத்தினுள் இறங்கியது. அங்கேயிருந்த முதலையொன்று யானையின் காலைப்பற்றிக் 'ஆதிமூலமே என்று கூவி அலறியது. சக்கராயுதத்தால் முதலையைத் விரைந்து வந்து கொண்டது. அப்பொழுது யானை அக்குரல் கேட்ட திருமால் துணித்து யானையைக் காத்தனர் என்பது கதை. யானையின் உயிருக்கு யமன்போல் இருந்தமைபற்றி முதலே கூற்றுறழ்கரா எனப்பட்டது. துளவு - துளசி. திருமாலுக்கு உகந்தது இது. - இலக்கணம் தார்முகில்-பண்புத்தொகை. இலாத-இடைக்குறை. 9. திருமாலைக்கண்ட கன்னன் மகிழ்ச்சி அமரரானவரும்........... H. H. H. H. H. H. H. H. ........மகிழ்ந்தான் சொற்பொருள் அமரர் ஆனவரும் - தேவரான வர்களும், அமரயோனிகளும் - தேவப்பிற வியையுடைய ஏனையோரும், அமரருக்கு அதிபன் ஆனவனும்தேவர் தலைவனுகிய இந்திர னும், கமலநான்முகனும்- தாமரையில் இருக்கும் அயனும், முனிவரும் - முனிவர்களும், கண்டு கனக நாள் மலர் கொடு - பார்த்துப் .ெ பா ன் ம ல ர் கொண்டு, பணிந்தார் - வணங்கினர்கள், சமரம் மா முனையில் - பெரிய போர்க்களத்தில், தனஞ்சயன் கணையால் - அருச் சுனனுடைய அம்பினுல், சாய்ந்து உயிர் வீடவும் - என் னுயிர் அழியவும், செங்கண் அமல நாரணனை-செந் தாமரைக் கண்ணனுகிய குற்ற, | மற்ற திருமாலை, காணவும் - கண்டுகளிக்கவும், பெற்றேன் என்று - பேறு பெற் றேன் என்று கூறி, தன் அகம் மிக மகிழ்ந்தான் . (கன்னன்) தன் மனத்தி னுள்ளே மகிழ்ந்தான்.
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/271
தோற்றம்