பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரம் 。9 SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - நாய் நெருங்க அஞ்சும். - இதல்ை புலியின் பெருமிதம் விளங்கு கிறது. வறுமையால் வாடிய பெருஞ் செல்வரையும் எவரும் தாழ்த்த அஞ்சுவர். ஆகவே அவர் பெருமிதமும் புலனுகின்றது. இச்செய்யுள் எடுத்துக்காட்டுவமை அணியாகும். இலக்கணம் வட்குபவோ-ஓ-எதிர்மறை ஓகாரம். வட்குப-வட்கு-ப. வட்கு-பகுதி, ப-பலர்பால் வினைமுற்று விகுதி. --- H. III. தொடர் நிலைச் செய்யுள் அ. சிலப்பதிகாரம் இஃது ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று. புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களை உடையது. இயல், இசை, நாடகம் என முத்தமிழும் விரவி வருவ தால் இது முத்தமிழ்க் காப்பியம் என்று சொல்லப்படும். சிலம்பு-அதிகாரம். சிலம்பினது அதிகாரம் என்று பொருள் படும். அதிகரித்தல்-முக்கியமாகக் கொள்ளுதல். கண்ணகியின் சிலம்பை முக்கியமாகக் கொண்டு பாடப்பட்டதாகலின் சிலப்பதி காரம் என்னும் பெயரினைப் பெற்றது. சிலம்பு, சிலப்பு என ஆனது வலித்தல் விகாரம். 'நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாரதியாரும், தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேரும் சிலப்பதிகாரம்" என்று கவிமணியும் இதனைப் பாராட்டியுள்ளனர். இந்நூல் மூன்று நீதிகளை அடிப்படையாகக் கொண்டது. (1) அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்ருகும் (2) பத்தி னிப் பெண்டிரைப் பாருலகேத்தும். (3) ஊழ்வின்ை நாடி வந்துறுத் தும் என்பனவாம். இக்கதை, ஆசிரியர் காலத்தே தமிழகத்திலேயே நிகழ்ந்த கதை யாதலின் இது முதல் நூலாகும். இந்நூலுக்கு அரும்பதவுரை ஒன்றுண்டு. அடியார்க்கு நல்லார் உரையொன்றுண்டு. இவ்வுரை நூல் முழுமைக்கும் இல்லை. ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் நூல் முழுமைக்கும் உரை எழுதி யிருக்கிரு.ர்கள். இந்நூலின் ஆசிரியர் சேரன் செங்குட்டுவன் தம்பியாகிய இளங்கோவடிகள்.