பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தொடர்நிலைச் செய்யுள் இலக்கணம் சேயிழை-பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. கலைேடு-ஓடு எண்ணுப் பொருளில் வந்தது. எழுதென்று-எழுக--என்று. அகரம் தொக்கது தொகுத்தல் விகாரம். சீயா_முன்-சீயாத முன். ஈறு கெட்ட எதிர்மறைப் பெய ரெச்சம். உலந்த-உல. -த்-த்-அ. உல-பகுதி, த்-சந்தி, சந்தியால் வந்த தகரம் நகரமானது விகாரம், த்-இறந்த கால இடை நிலை, அ-பெயரெச்ச விகுதி. உற்றேன்-உறு-ஏன். உறு-பகுதி, ஏன்-விகுதி. பகுதி இரட்டித்து இறந்த காலங் காட் டிற்று. ஆ. பெரிய புராணம் மெய்ப்பொருள் நாயனுர் புராணம் பெரியர்-புராணம் செயற்கரிய செய்த பெரியார்களுடைய பழைய வரலாறு எனப் பொருள்படும். புராணம்-பழங்கதை. பெரியவர்களுடைய பழைய வரலாறுகளைக் கூறும் நூல். இந் நூலுள் கூறப்பெறும் பெரியார்கள் சிவனடியார்கள் ஆவர். நாயன் மார் என இவர்களை அழைப்பர். இவர்கள் அறுபத்து மூவர். இவர் களைத் தவிர, தொகையடியார் ஒன்பது பேர் ஆவர். இத்தொண் டர்களின் வரலாற்றைக் கூறுவதால் திருத்தொண்டர் புராணம் என்ற பெயரும் இந்நூலுக்குண்டு. சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையில் அறுபத்து மூவ குடைய வரலாறு தொகுத்துக் கூறப்பட்டிருக்கிறது. நம்பியாண் டார் நம்பிகள் இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியில், சிறிது விரித்துக் கூறப்பட்டுள்ளது. பெரிய புராணத்தில் நன்கு விரித்துக் கூறப்பட்டுள்ளது. ஆகவே இந்நூலுக்கு முன்னைய இரு நூலும் முதல் நூல்களாகின்றன. இஃது அவற்றின் வழிவந்த நூலாதலின் வழி நூல் ஆகும். இந்நூல் இரண்டு பெரிய காண்டங்களைக் கொண்டது. ஏனைய புராணங்களைப் போலப் பிறமொழியிலிருந்து மொழி பெயர்க்கப் படாத தனித் தமிழ்க் காப்பியம். தில்லைப் பெருமால்ை 'உலகெ லாம்’ என இந்நூலுக்கு அடியெடுத்துக் கொடுக்கப்பட்டது என்பர்.