பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 இளைஞர்களாகிய நீங்கள் இந்நிலை நீடிக்கட்டும் என்று கருதி உண்டு, உறங்கி வாழ எண்ணுகிறீர்களா? அன்றி இவ்விழி நிலையை மாற்றியமைக்க வேண்டுமென்று கருதுகிறீர்களா? மாற்றம் கருதினால் அதன் பொருட்டு என்ன செய்யப் போகிறீர்கள்? o நம் தவத்திரு அடிகளாரவர்களைப் பணிவுடன் ஒன்று வேண்டு கிறேன். அடிகளார் அவர்களே! உங்கள் பொறுப்பில் ஐந்து திருக்கோவில்கள் உள்ளன. அங்கே எம் மொழியால் வழிபாடு நட்ைபெறுகிறதென்பதை நீங்கள் அறிவீர்கள். அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக' என வேண்டிக் கொண்ட இறைவன் முன்னே வட மொழிக்கே தொடர்ந்து இடந்தரப் போகிறீர்களா? அன்றி, நால்வர் போற்றிய நற்றமிழை - தெய்வத்தன்மை பொருந்திய தீந்தமிழைக் கோவிலுக்குட் புகவிட விழைகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள்? என்று நான் மனந்திறந்து பேசிய மர்ந்தேன். அடிகளார்கருத்துரை கூற எழுந்து உணர்ச்சி பொங்கப் பேசினார். அவர்தம் பேச்சை வெளியிலிருந்து கேட்போர் நாவலர் நெடுஞ் செழியன் தான் பேசுகிறாரோ? (அந்தக் காலத்து நாவலர்) என்று ஐயுறுவர். அவ்வளவு உணர்ச்சி வயப்பட்டுப் பேசினார். இறுதியாக நீங்கள் ஒன்று கூடிக் கோவிலின் முன் மறியல் செய்யுங்கள். உங்களுக்கு உரிமையுண்டு. பாலகவி இராமநாதன் செட்டியார், சா. கணேசன் போன்றவர்களுடன் தொடர்பு கொண்டு, திட்டமிட்டு மறியல் செய்யுங்கள். தமிழ் வழி பாட்டிற்கு ஆவண செய்கிறோம் என்று பொழிந்தார். அன்று முதல் அடிகளாரிடம் ஈடுபாடு கொண்ட நான், இன்று வரை அதனை வளர்த்து வருகிறேன். மொழி வெறியா? ஒரு சமயம் இராமநாதபுரத்தில் ஒரு கூட்டத்திற்குப் பேசச் சென்றிருந்தேன். தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமை யேற்றார். வளையாபதியடிகள் என்ற ஒருவரும் சொற்பொழி வாற்றினார்.