பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப்பறவையின் வாழ்க்கைப் பயணம் 103 அவர் கூறியிருக்கலாம். என் குடும்ப நிலையைக் கூறியிரார். வீடு, நிலம் முதலான எந்தச் சொத்தும் எங்களுக்குக் கிடையாது. தமிழ் ஒன்றுதான் என் சொத்து - இதற்கு விருப்பமானால் எழுதுங்கள்: வருகிறேன் - என்று எழுதிவிட்டேன். மறுமொழியே வரவில்லை. சில நாள் சென்ற பின், புதுக்கோட்டைக்குச் சென்று கலியான சுந்தரத்திடம் செய்தியைச் சொன்னேன். அட, போங்க முடியரசன்; இப்படியாசிறுபிள்ளைத்தனமாஎழுதுவது? அவன் என்ன நினைப்பான், ஒன்றுமே இல்லாதவன் என்றுதானே எண்ணி யிருப்பான்? அதுதான் அந்த ஆளை இந்தப் பக்கமே காணோம். சரி, வேறிடம் பார்ப்போம்" என்று கூறி விட்டார். இந்த அளவில் இது நின்று விட்டது. திருமணம் அவர், பிறிதோரிடத்தில் பெண் பார்த்து என் அன்னையாரை அழைத்துக் காட்டியிருக்கிறார். அன்னையார்க்கு அப்பெண்ணை மிகவும் பிடித்து விட்டது. நான் விடுமுறையில் மேலைச்சிவபுரிக்கு வந்தேன். பெண்ணைப் பார்க்க என்னை அழைத்தார். இந்தி யெதிர்ப்புப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது திருமணம் வேண்டாமென்று சொன்னேன். 'சென்னைக்குப் போகும் போதாவது இறங்கிப் பார்த்து விட்டு, அங்கிருந்தே சென்னைக்குப் போ' என்று அன்னையார் கூற நானும் இசைந்து, அன்னையுடன் சென்றேன். என் அன்னைக்கு அருகில் பெண் அமர்ந்தாள். நல்ல சிவப்பான அழகு மிக்க பெண்ணைத் திருமணஞ் செய்து கொள்ள வேண்டுமென்று கற்பனைசெய்திருந்தேன். ஆனால் இந்தப் பெண்ணோ நிறம் குறைவு; அழகும் ஒரளவு தான். ஆனாலும் என்அன்னையிடம் அப்பெண் நடந்து கொண்ட முறை, அமைதியான தோற்றம், சிரித்த முகம், இவற்றைக் கண்டு, அம்மா குணத்துக்கு ஏற்றவள்தான் என முடிவு செய்து, ஒப்புதல் கொடுத்து விட்டேன். பெண் வீட்டாருக்கும். என்னைப் பிடித்து விட்டது. ஆனாலும் பெண் விருப்பத்தை நன்கு தெரிந்து, ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டுச் சென்னைக்குச் சென்று விட்டேன். பெண்ணின் விருப்பத்தை அவள் வீட்டார் கேட்க மணமகன் பருமனாக இருக்கிறார் என்று சொல்லியிருக்கிறாள். அப்படி யெல்லாம் ஒன்றுமில்லை என்று பெண்ணின் தமக்கையார்