பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 சொல்லியிருக்கிறார். உண்மையில் அப்போது நான் சற்றுப் பருமன்தான். இரண்டாம் முறையாக மணமகனைப் பார்க்கப் பெண் விரும்புவதாக எழுதி, என்னை வரவழைத்தனர். அப்போது கடுமையான காய்ச்சலால் வாடி வதங்கி மெலிந்து வந்திருந்தேன். பெண் மறைவாக இருந்து பார்த்து, ஒல்லியாகத்தானிருக்கிறார் என்ற இசைந்து விட்டாள். எனினும் நான் பெண்ணின் தோழி வீட்டாரிடம் சென்று, பெண்ணுக்கு முழு விருப்பந்தானா என்பதை வினவித் தெரிந்து கொண்டேன். அவள் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த வி.சு. திருநாவுக்கரசிடம் பெண்ணின் குண நலங்களைத் தெரிந்து கொண்டேன். கலப்புமணம் என்றவுடன், காதல் மணம் என எண்ணிவிடுகின்றனர். திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் என்னைச் செவ்வி (பேட்டி) கண்டவர்கூடகாதலித்துக்கலியாணம் செய்துகொண்டீர்களா?” என ஒரு வினா எழுப்பினார். கலியாணஞ் செய்து கொண்டுதான் காதலித்தேன் என மறுமொழிதந்தேன். காதல் என்பது அப்பொழுது எனக்குத் தெரியாது. பேராசிரியர்க. அன்பழகன் இல்லத்தில் அண்ணாவைச்சந்தித்துத் திருமணத்துக்குத் தலைமை தாங்க வேண்டினோம். குடந்தையில் மணியம்மையார்தலைமையில் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, நான் எப்படி வர முடியும்? எந்த நேரத்திலும் நாங்கள் சிறை செய்யப்படலாம் எனக் கூறி அண்ணா மறுத்து விட்டார். பின்னர், தாத்தா மயிலை சிவ. முத்து அவர்கள் தலைமையில் 1949 பிப்பிரவரி, இரண்டாம் நாள் எனக்கும் கலைச்செல்விக்கும் திருமணம் நடைபெற்றது. பூவாளுர் பொன்னபலனார். காஞ்சி மணிமொழியார், டி. கே. சீனிவாசன், கவிஞர் வாணி தாசன், அழகுவேலன் முதலானோர் வாழ்த்துரை வழங்கினர். அப்பொழுது தடை செய்யப்பட்டிருந்த இராவண காவியம் அழகு வேலனால் பரிசிலாக வழங்கப்பட்டது. கலைஞர். மு. கருணாநிதியும் வாழ்த்துரை வழங்குவதாக அச்சிடப்பட்டிருந்தது. அப்பொழுது கலைஞரை எனக்குத் தெரியாது. பார்த்தது கூட இல்லை. திருவாரூர் அண்ணன் சண்முகம் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் கலைஞர் சென்னைக்குச் செல்வதால் வர