பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TT அரங்கக் குயில் தமிழகத்து மாவட்டங்கள் அனைத்திலும் நிகழ்ந்த பாட்டரங்கு களிலும் வானொலிக் கவியரங்குகளிலும் பெரும்பாலும் கலந்து கொண்டிருக்கிறேன். தலைமை ஏற்றும் பாடியிருக்கிறேன், பிறர் தலைமையிலும் பாடியிருக்கிறேன். அரங்கேறிய முடியரசன் பாடல்களில் ஒன்றும் சோடை போனது கிடையாது’ எனத் தமிழண்ணல் குறிப்பிடுவார். பாராட்டும் புகழும் கிடைத்தது உண்மைதான் என நான் கூறுதலினும் பிறர் கூறுதலே பொருத்த எனினும் நான் இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு. அஃது என்ன? அப்புகழினும் பிறிதொரு "புகழ்' எனக்குக் கிட்டியது என்பதைக் குறித்தற் பொருட்டேயாகும். பல அரங்குகளில் நிகழ்ந்தனவற்றுட் சிலவற்றை ஈண்டுக் காண்போம். குடியரசு நான் தலைமைப் பொறுப்பேற்ற அரங்குகளில் பாடிய பாவலர் என்னை விளிக்கும் பொழுது குடி அரசே காரைக் குடியரசே என நயம்பட விளித்துப் பாடுவார். இதனைச் செவியேற்ற மக்கள் குடி என்னும் சொற்குப் பிறிதொரு பொருள் கொண்டு, நான் குடிகாரன் என்று முடிவு கட்டி விட்டனர். அக்காலங்களில் உடல் நலங் குன்றி யமையால் தடுமாற்றத்துடன் நடந்து செல்லும் என்னைக் கண்டோர். 'குடிகாரன்' என்பதை உறுதிப் படுத்தி விட்டனர். அயலூர்களில் என் நண்பர் பழநியிடம் பலர் வந்து, நம்ம முடியரசன் எந்த நேரமும் ஏன் குடித்துக் கொண்டு கெடுகிறார்: என்று வருந்தியுள்ளனர். நண்பர் மறுத்துக் கூறியும் அவர்கள் நம்பவில்லை. நல்லகவிதைகளை எழுதுகிறார்; குடிக்காமல் இருக்க