பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 265 முடியாதே; உங்களுக்குத் தெரியாமற் குடிப்பார் போலும் என்று கூறியிருக்கின்றனர். குடித்தாற்றான் நல்ல கவிதை வரும் என்பது அவர்கள் வகுத்துக் கொண்ட இலக்கணம். வெள்ளி முடி மதுரைத் திருவள்ளுவர் கழகச் சார்பில் நிகழ்ந்த பாட்டரங்கில் நான் தலைமையேற்றேன். பாவலர் ஒருவர் பாடுங்கால், 'வெள்ளி முடியரசே என விளித்துப் பாடினார். என் தலைமுடி நரைத்துள்ள மையை நகைச் சுவையாக அவ்வாறு சுட்டினார். வெள்ளிமுடி மட்டுமன்று; தங்க முடியுடையேன் என்று நான் கூறினேன். தங்கத்தால் ஆகிய முடி என ஒரு பொருள். தலையில் தங்கமுடியு டையவன் என மற்றொரு பொருள். நரைத்தாலும் உதிர்ந்துவிட வில்லை என்பது கருத்து. அவ்வரங்கில் வள்ளல் வெள்ளைச்சாமி நாடாரும் அமர்ந்திருந் தார். திருக்குறள் நன்கு பயின்றவர்; திருக்குறள் பரவ வேண்டு மென்றும் கருதுபவர். ஆதலின் அவரைப் பாராட்டக் கருதி, இவர் பொருளை நாட்மாட்டார்: புகழை நாடமாட்டார்; குறளை நாடுவார் என்ற பொருளில், இந்நாடார் பொருள் நாடார், புகழ் நாடார், குறள் நாடுவார் என நகைச்சுவையாகக் குறிப்பிட்டேன். அதற்கு அவர் தலைவர் என்னைப் பொருள் நாடார், புகழ் நாடார் என்று குறிப்பிட்டார். அது முழுப் பொய்; நான் பொருளை நாடுபவன், புகழை நாடுபவன், குறளையும் நாடுபவன்' என்று சுவைபட மொழிந்தார். நானும் விட்டுவிடவில்லை. நானும் மறுமொழி தந்தேன். வெள்ளைச்சாமி நாடார் அவர்கள் குறிப்பிட்ட பொருளில் நான் கூறவில்லை. பொருளுடைய நாடார். புகழுடைய நாடார் என்று தான் குறிப்பிட்டேன் என அவையை நோக்கி நான் கூறியதும் அனைவரும் சிரித்து மகிழ்ந்தோம். காரைக்குடியில் நிகழ்ந்த அண்ணாவிழாவில் நான் தலைமை ஏற்ற பொழுது மீண்டும் ஒருவர் வெள்ளி முடியரசே என விளித்தார் என்னை வெள்ளி முடியரசே என விளித்து எள்ளி நகையாடினார். அடுத்த ஆண்டு, தலைமை தாங்கத் தலைமையேற்று வருவேன் (தலை + மை) என்றேன். மை தடவி விடின் வெள்ளி முடியெனச் சொல்ல முடியாதல்லவா?