பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 - கவியரசர்முடியரசன் படைப்புகள்-1 முக்கோட்டு நாமம் தஞ்சையில் கம்பர் விழா. கம்பன்வளர்ந்த கதை' என்பது தலைப்பு. தான் வளர்ந்த கதையைக் கம்பன் கூறுவதாகக் கவிதை புனைந்திருந்தேன். உள்ளம் விரும்பி ஒவ்வோர் இடங்களிலே வள்ளல் சடையப்பன் வளர் பெயரைப் பொறித்திருந்தேன், பொறித் திருந்த காவியத்தைப் பூவுலகோர் ஏற்பதற்கு நெறித் துறையில் அலைமோதும் நீளரங்கத்தலத்துறையும். முக்கோட்டு நாமத்தா முன்வைத்தேன்' என்று கம்பன் புகல்வதாகப் பாடினேன். அவை நடுவில் ஒருவர் எழுந்தார். குடுமித்தலையர்; திருமண் நெற்றியர்; கல்லூரிப் பேராசிரியர். அவர் சிவந்த விழிகளுடன் 'முக்கோட்டு நாமம்' என்றால் என்ன?’ என்றார். மூன்று கோடுகளைக் கொண்ட நாமம் என்று நெற்றியில் கோடிட்டுக் காட்டினேன். அதை அவ்வாறு சொல்லியிருப்பது தவறு என்று பேராசிரியா மறுத்துரைத்தார். தலைமை தாங்கிய சா. கணேசன் அவர்கள் எழுந்து அது கவிஞரின் விருப்பம் உங்களுக்குத் தடையெழுப்ப உரிமையில்லை. விருப்பமிருந்தால் இருந்து கேளுங்கள். இல்லையென்றால் எழுந்து செல்லுங்கள் என்று கூறிவிட்டார். பேராசிரியர் அமர்ந்துவிட்டார். தலைவர் என்னைப் பாடுக என்றார். இவ்வெதிர்ப்புக்கும் கம்பன் கூறுவதாக அமைந்திருந்த அடுத்த வரிக்கும் மிகவும் பொருத்தமாகிவிட்டது. அன்றே எதிர்த்தார் எதிர்ப்புக்கா அஞ்சிடுவேன்? என்ற வரியை நான் பாடியதும் ஒரே சிரிப்பு ஒரே கைதட்டல். நாமத்தார் எழுந்து வெளியேறிவிட்டார். அப்பாடல் சில வரிகள் நீக்கப்பட்டுக் கம்பன் குரல்" என்ற தலைப்பில்முடியரசன்கவிதைகளில்வெளியாகியுள்ளது. இப்பாடலில் 'டி.கே.சி. சொ.முருகப்பர். சா.கணேசன், பேரறிஞர் அண்ணா முதலியோர் என் தோழர்கள் என்று கம்பன் கூறுவதாகக் குறிப்பிட் டுள்ளேன். இப்பகுதியைப் படித்துவிட்டுக் கவியரசர் உள்ளத்தை முடியரசர் எவ்வாறு புரிந்து கொண்டுள்ளார் என முடியரசன் உள்ளத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என ஆனந்த விகடனில் பி.பூரீ அவர்கள் மதிப்புரை எழுதியுள்ளார்):