பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப்பயணம் 267 முருகன் என் தாய் குன்றக்குடியில் விசாகத் திருநாள். கவியரங்கம் ஏற்பாடாகி யிருந்தது. முருகன் என் தாய்' என்னும் தலைப்பிற் பாட அழைப்பு வந்தது. நான் மறுத்துவிட்டேன். அப்பொழுது இராமகாதை' பதிப்பிற்காகச் சொ.முருகப்பனாருடன் அமராவதிபுதுாரில் இருக் கிறேன். 'கவியரங்கத்துக்கு ஒத்துக் கொண்டீர்களா என்று முருகப் பனார் வினவினார். மறுத்துவிட்டேன் என்றேன். ஏன்? என்றார். என் கொள்கைக்கும் தலைப்புக்கும் ஒத்து வராது. அதனால் மறுத்தேன் என்று மறுமொழி கூறினேன். - 'உங்களைப் பெருங்கவிஞர் என்று எண்ணியிருந்தேன். இனி அக்கருத்தை மாற்றிக் கொள்கிறேன் என்று என் மானவுணர்ச்சியைத் துண்டி விட்டார். ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? என்று நான் வினவ, ஆமாம், எந்தத்தலைப்பைக் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு தன் கருத்திற்கேற்ப அதைப் பாடுபவன்தானே பெருங் கவிஞன் என்றார். அவர் கூறியது சரியான அறைகூவலாக எனக்குத் தோன்றியது. உடனே அழைக்க வந்தவரிடம் ஒப்புதலை அறிவித்து விட்டேன். எனக்கேற்பப் பாடிக் கொண்டு, பாடலுடன் குன்றக்குடிக்குச் சென்றேன். அரங்கு தொடங்கிவிட்டது. உள்ளே புகுந்தால் முருகன் திருவுருவத்தின் முன் பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார். அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோ.சுப்பிரமணிய பிள்ளை, கலைமகள் ஆசிரியர் கி.வா.சகன்னாதன் போன்ற பெருமக்கள் அரங்கில் சட்டையணியாமல் நின்று கொண்டிருப்பதைக் கண்டதும் திகைத்துப் போனேன். நானும் சென்று வரிசையில் நின்றேன். எதிரில் நின்று கொண் டிருந்த தவத்திரு அடிகளார். தம் உடம்பைத் தொட்டுக் காட்டிச் சாடை செய்தார். எனக்கொன்றும் விளங்கவில்லை. மற்றொருவர் வந்து, சட்டையைக்கழற்றுமாறு சாமி சொல்லுது என்றார்.