பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 4 I செட்டிநாட்டரசர் அண்ணாமலையார்பொன்னடைஅணிவித்துப் பாராட்டினார். சுவைஞர் மணி டி. கே. சிதம்பரநாத முதலியார் தமக்கே உரிய பாங்கில் நெஞ்சுருகப் பாராட்டிப் பேசினார். தில்லைப் பதியுடையான் சிற்றம்பலந் தன்னில் என்ற கவிமணியின் ஒரே பாடலைப் பற்றி, ஏறக்குறைய ஒரு மணிநேரம் சுவைத்துச் வைத்து எம்மையும் சுவைத்து மகிழ வைத்துப் பாராட்டுரை நிகழ்த்தினார். அப்பொழிவு இன்றும் பசுமையாக என் செவிகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அமராவதி புதுர்ப்பிச்சப்பாசுப்பிரமணியம் அவர்கள் பாராட்டுரை நிகழ்த்தும் பொழுது, கவிமணி பாடலிலுள்ள எளிமை, இனிமை, வை முதலியவற்றை எடுத்தியம்பினார். சொ. முருகப்பனாரின் மகளிர் இல்லத்து மாணவச் சிறாரைக் கொண்டு ஓரங்க நாடகங்கள் நடத்திக் காட்டப் பட்டன. அச்சிறார் ம் நடிப்பு அனைவர் உள்ளத்தையும் கவர்ந்தது. குறிப்பாகக் குகன் வேடம் புனைந்த சிறுவன் நடிப்பு, அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்து விட்டது. சுருங்கக் கூறின், பண்டை வேந்தர் தம் அரசவையில் பாவலர்க்குச் பிறப்புச் செய்தது போல அக்காட்சி அமைந்திருந்தது. இறுதியில் கவிமணியார் . முந்து நன்றியுரை நவின்றார். அந் நன்றியுரை சடங்கு முறையில் இல்லாது, அவர் தம் உள்ளத்தி விருந்து பொங்கி வெளிவந்தது. இங்கு அனைவரும் என்னைப் பாராட்டிப் பெருமைப்படுத்தினர். செட்டி நாட்டரசர் அவர்கள் எனக்குப் பொன்னாடை அணிவித்துப் பெருமை செய்தார்கள். இத்தனைப் பெருமைக்கும் தகுதியில்லாத என்னை இப்படியெல்லாம் பாராட்டினார்கள். யானைக்குப் போர்த்த வேண்டிய முகபடாம் இந்த ஆட்டுக் குட்டிக்குப் போர்த்தப்பட்டு விட்டது என்று கருதுகிறேன். இப்பெருமை யெல்லாம் என் தமிழ்த் தாய்க்கே...................? கவிமணிக்குப் பேச்சு எழவில்லை. கண்கள் ததும்பி விட்டன. அவர் கண்கள் மட்டுமா? அவையிற் கூடியிருந்த அத்துணைப் பேர் கண்களும் குளமாயின. அழுகையை அடக்கிக் கொண்டு, கவிமணி பிறகு பேசத் தொடங்கினார். ஆனால் உணர்ச்சி வயப்பட்டுத்