பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கவியரசர் முடியரசன் படைப்புகள்-11 தேம்பிக் கொண்டிருந்த என் செவிகளால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முதுமகர் மூதறிஞர், கவிமணி என்று கற்றோரால் அழைக்கப்பட்ட அந்தணாளர்; நாட்டார் புகழுக்கு நாயகமாக விளங்கியவர். எவ்வளவு பாராட்டினும் அவ்வளவு பாராட்டுக்கும் தகுதி படைத் தவர். அப்பெருமகனார் தம்மை ஆட்டுக்குட்டி' என அடக்கமாகக் கூறிக் கொண்டார் என்றால் அப்பேருளத்தை - பெருந்தன்மையை - அடக்கப் பண்பை எப்படித்தான் புகழ்வது? ஒரு சிறு பாராட்டைப் பெற்று விட்டாற் கூடச்சில ஆட்டுக் குட்டிகள் யானை போலப் பெருமித நடைபோடும் இக்காலத்தை என்னென்பது? இவ்வுணர்ச்சி மிக்க காட்சி, என் உள்ளத்திற் பதிந்து, பின் பாடல்களாக வெளிப்பட்டன. வளர்ந்த முறை பெருஞ்செல்வக் குடியிற் பிறந்திலேன் எனினும் அக்குடியிற் பிறந்தேன் போலவே வளர்க்கப்பட்டேன். ஒரே மகனல்லவா? எந்நேரமும் மடிப்புக் குலையாத உடையுடன் தான் இருப்பேன். செட்டிநாட்டுப் பகுதியானமையால் விலையுயர்ந்ததுணிகளாகவே இருக்கும். பேழை நிறைய ஆடைகள் இருக்கும்; அணிந்துள்ள ஆடை சிறிது கசங்கியிருப்பினும் என் அன்னையார் மாற்றி விடுவார். கடுக்கண், மோதிரம், கழுத்துச் சங்கிலி, கைச்சங்கிலி எல்லாம் அணிந்திருப்பேன். இவ்வளவு செல்லமாக வளர்த்தாலும் என்னைக் கண்டித்து வளர்ப்பதில் தயங்கமாட்டார்கள். நானும் கட்டுப்பட்டு அஞ்சியே ஒழுகுவேன். நான் தந்தையான பின்னரும் என் தந்தையிடம் கட்டுப்பட்டே நடந்து வந்தேன். தந்தையாரிடம் பேச மாட்டேன். அவர் பேசும் பொழுதுதான் அவரிடம் பேசுவேன். நான் மாணவனாக இருக்கும் பொழுது அவரிடத்தில் அன்பைக் கண்டதேயில்லை. அன்னைதான் அன்பு காட்டுவார். எதுவும் வேண்டுமெனில் அன்னையிடம் வேண்டித்தான் பெறுவேன். என் மாணவப் பருவத்தில் என்னைத் தணித்துக் காண்ப தரிது. நண்பர் புடை சூழவே எப்பொழுதும் இருப்பேன். அருகில் உள்ள