பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 43 வலம்புரிக்குத்திரைப்படங்காணச்செல்லினும், சிற்றுண்டிக் கடைக்குச் செல்லினும், புறத்தே உலவச் செல்லினும் நண்பரின்றிச் செல்லேன். அடிக்கடி எங்கள் இல்லத்திற்கும் அழைத்து வருவேன். அனை வர்க்கும் அங்கே தான் உண்வு; உண்ணாது செல்ல என் அன்னையார் விடமாட்டார். அவர்களையும் தம் பிள்ளை போலவே கருதி அன்பு செலுத்துவார். அவருட் சிலர் தாமே வலிய வந்து, உரிமையுடன் உண்டு. செல்வதுமுண்டு. முதல் நாள் எங்கள் இல்லத்தில் இன்ன குழம்பு என்று தெரிந்ததும், "ஏம்மா, எனக்குச் சொல்லி விடல்லே?" என்று புலந்து கொள்வாரும் உண்டு. திரைப்படங்களுக்குச் செல்லுங்கால், நண்பர்கள் சட்டை கசங்கியிருந்தால், உடனே என் சட்டைகளைக் கொடுத்து, அணிந்து கொள்ளச் செய்வார் என் அன்னை. அவ்வளவு அன்புள்ளங் கொண்ட அன்னையார், சில வேளைகளிற் கையிற் கிடைத்தது கொண்டு என்னை வெளுத்துக் கட்டியதும் உண்டு. ஒரு நாள் அரிவாளையெடுத்து வெட்டுதற்கே வந்து விட்டார். அந்த அளவிற்கு முன் கோபமும் உண்டு. படிப்பார்வங்குன்றல் நான் திரைப்படங்கள் பார்ப்பதில் மிகுதியும் ஆர்வங் காட்டுவேன். ஆர்வம் என்பதைவிட வெறி' என்றே சொல்லலாம். ஏனெனில், பெற்றோர்க்கும் ஆசிரியர்களுக்கும் அஞ்சி நடக்கும் நான், அவர்கள் தடுத்தும் கட்டுப்படுத்தியும் கூட அவர்களை ஏமாற்றி விட்டுச் சென்று விடுவேன் என்றால் அதனை வெறி யென்று தானே சொல்ல வேண்டும்? இதன் பொருட்டு ஆசிரியர் கண்காணிப்பிலும் விடப்பட்டேன். ஒன்றும் பயனில்லை. மேலும் தன்மானக் காற்றின் நலம் நுகர்ந்தமையால், பொழு தெல்லாம் அதே பேச்சு, அதே சிந்தனை, அதே செயல், இதழ்கள் படிப்பதிலும் மாநாடுகளுக்கும் கூட்டங்களுக்கும் செல்வதிலும் நேரங்களைச் செலவிட்டேன். தன்மான இயக்கத்திலும் வெறி கொண்டலைந்தேன். புராணங்கள், இதிகாசங்கள் போன்ற நூல்கள் எங்கட்குப் பாடங்களாக வைக்கப்பட்டிருந்தன. அவை என் தன்மானக் கொள்கைக்கு மாறாக அமைந்திருந்தன. தொல்காப்பியப் பொருள