பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|2. கூண்டுக்கிளி சென்னையில் ஆசிரியப் பணி மயிலாடுதுறையில்நான் தங்கியிருக்கும்ம்பொழுது சென்னையிலிருந்து நா. அறிவழகன்மடல் வந்தது. அம்மடலில், முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப்பள்ளியில் எனக்குத் தமிழாசிரியர் பணி கிடைத்திருப் பதால் உடனே புறப்பட்டு வருமாறு எழுதியிருந்தார். மேலும் தாம் தொடங்கும் அழகு" என்னும் மாத இதழுக்கு உறுதுணையாக இருக்கலாம் என்றும் எழுதியிருந்தார். பத்திரிகைத் துறையிலோ திரைப்படத்துறையிலோ பணியாற்ற வேண்டும் என எண்ணியிருந்த நான் எண்ணியெண்ணி ஒரு முடிவுக்கு வந்தேன். ஆம்; ஆசிரியப் பணி புனித மானது என எண்ணி, அதனை ஏற்கச் சென்னைக்குச் சென்றேன். 1947 ஆம் ஆண்டு சூன் மாதம் பணியில் அமர்ந்தேன். மாதச் சம்பளம் ஐம்பது உருவா. மு.ரா. பெருமாள் முதலியார் தலைமை யாசிரியராக இருந்தார். அங்குத் தமிழாசிரியராக இருந்த முனைவர் மா. இராசமாணிக்கனார் விலகி, விவேகானந்தா கல்லூரிக்கு ஆசிரியராகச் செல்லும் நேரத்தில் நான் பணியிற் சேர்கிறேன். தலைமைத் தமிழாசிரியராகச் சதாசிவ நாயக்கர் பணியாற்றிக் கொண்டிருந்தார். எங்களிடம் பேரன்பு செலுத்தும் பெற்றியர். அங்குத் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த தில்லை. தா. அழகு வேலன், திருமாவளவன் எனக்கு உற்ற நண்பராயினர். எம்மை மூவேந்தர் என்றே அழைப்பர். எந்நேரத்திலும் எவ்விடத் திலும் மூவரும் சேர்ந்தே இருப்போம். ஒத்த கருத்தும் ஒன்றிப் பழகும் இயல்பும் உடைமையால் இணைபிரியாதிருந்தோம்.