பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கவியரசர் முடியரசன் படைப்புகள் -10 ஆசிரியப் பணி புனித மானது என்று நான் விரும்பி ஏற்றுக் கொள்ளினும் என்னைப்பொறுத்த வரை அஃது ஒர் அடிமைத் தொழில் போலவே தோன்றியது. உரிமையுணர்வுடன் பறந்து திரியவே என் உளம் அவாவியது. அந்த அவாவுக்குத் தடைகள் இருத்தல் போல, ஒர் உணர்வு என்னுள் எழுந்த வண்ணமாகவே இருந்தது. எனக்கு மேல் தலைமையாசிரியர் ஒருவர். அவர்க்கு மேலே கல்வி அலுவலர், பள்ளிச் செயலர், பள்ளித் தலைவர் என்று பற்பலர். மேலும் நடைமுறைச் சட்ட திட்டங்கள். எல்லாஞ் சேர்ந்து, என்னைச் சூழ்ந்துள்ள கம்பிகளாக உணர்ந்தேன். அதனால் கூண்டில டைபட்ட கிளிபோலப் பணி புரிந்து வந்தேன். எனினும் கடமையைச் செவ்வனே ஆற்றி வந்தேன். சிறப்பு விருது மாணவர்களிடம் எந்த அளவு கண்டிப்புடையவனாக இருந்தேனோ அந்த அளவு அன்பும் உடையவனாக இருந்தேன். அதனால் மாணவர் என்னிடம் ஈடுபாடு மிகுதியுங் கொண்டிருந்தனர். மாணவர் எவரேயாகினும் சரிசமமாகவே அன்பு செலுத்துவேன்; அக்கறைகாட்டுவேன். வேறுபாட்டுணர்வு தோன்றுவதேயில்லை. வகுப்பிற்குள் நான்துழைவேன்; மாணவர் எழுந்து நிற்பர். நான் என் இருக்கையை அடைந்ததும் வெல்க தமிழ் என்று ஒரே குரலில் முழங்கி அமர்வர். பின்னரே பாடம் நடைபெறும். ஆசிரியர் களுக்கு ஒவ்வொரு சிறப்புப் பெயர் சூட்டி, தமக்குள் குறிப்பிட்டுக் கொள்வது மாணவர் வழக்கம், அம்முறையில் வெல்க தமிழ் வாத்தியார் என்று எனக்கு சிறப்புப் பெயர் சூட்டியிருந்தனர். அப்பொழுது வடமொழி, தெலுங்கு முதலிய மொழிகளும் கற்றுக் கொடுக்கப்பட்டுவந்தன. வடமொழிவகுப்புக்குச்செல்லும்மாணவர்கள், அங்குள்ள கரும் பலகையில் வெல்க தமிழ் எனப் பெரிதாக எழுதி வைத்து விடுவர். வடமொழி ஆசிரியர், அதைக்கண்டு, வெகுண்டு சீறி விழுவார். இதற்கு நான் தான் காரணம் என்பது அவர் நினைப்பு. என்னைக் குலப்பகையாகக் கருதுவார். கடித்துக்குதறிவிடுவது போலப் பார்ப்பார். பார்வையில் நெருப்புப் பொறிகள் சிந்தும். விழிகள் நச்சுமிழும். பள்ளிச்செயலர் ஒரு தெலுங்கர்; வடமொழிப்பற்று மிக்கவர் என்னைப் பற்றிய செய்திகள், வடமொழி ஆசிரியர் வழியாக