பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி வெந்நிட லறியா வெல்போர்க் கடம்பன் பின்னவள் சுரும்பார் குழலியும் இவனும் ஒருவர்க் கொருவர் பொருவறு நிலையினர் இருவருள் முதல்வர் இவனா அவளா எவரெனத் தெளிதல் இயலாத் தகைத்தே மாதேவி : ஆமாம் அவளை அறிகுவென் யானும் அம்மா மகளின் பொறையும் பொற்பும் செறிந்தநல் லறிவும் செவ்விய பண்பும் நிறைந்தவள் அவளென் நெஞ்சங் கவர்ந்தவள். நாகனார் : நின்னெஞ் சொன்றோ? நின்மகள் நெஞ்சும் பொன்மகள் அவள்தான் புகுந்து கவர்ந்தனள் நாகனார் : காதல் எனயான் கழறினே னல்லேன், ஒதுங் கல்வி உயரிய பண்பு பேதை யவள்பாற் பெருகுதல் கண்டு தீதிலான் அன்பைச் சிறியாட் கீந்தனன் எனவே மொழிந்தனென். ஈதொரு குறையோ? மாதேவி : மனங்கொளும் ஒருத்தியை மணங்கொள விழைதல் சினங்கொளற்குரித்தோ? .... பாண்டியன் : . . . . . .... சினமே எமக்கிலை அன்பா? காதலா? அறிய விழைந்தனம்; இம்மா தேவிக் கிசைவெனில் எமக்கும் மறுப்பிலை விரைவில் மணவினை தொடங்குதும்: விரும்புவ தெனிலோ வேல்விழி மொழிக; மாதேவி ; மறுப்பும் விருப்பும் மகன்சொல லன்றோ பொருத்தம்... பாண்டியன் : . . . . . தேவி, பொங்கு கடல்சூழ் காழக வேந்தன் கடுங்கட் சீயன் ஏழிசைச் செல்வி எழிலியாம் மகளை வழுதிக் கீயும் விழைவினன் என்பது பழுதிலா அமைச்சர் பகரக் கேட்டுளேம்: 205