பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி தனியா வேட்கை தாங்கவேற் கினுமோர் குவளைப் புனலாற் குளிர்தரச் செய்க (மீண்டும் அவள் கொணர்ந்த நீரைப் பருகிவிட்டு நவையிலா அன்பின் நல்லாய் நன்றி. குழலி : பல்கனிச் சாறு பருகும் நினக்குப் புல்லிய தண்புனல் நல்கினென் அதற்கு நன்றி நவிலல் நயத்தகு செயலோ? என்றுழ் பொழுதென எண்ணித் தந்தனென்; வழுதி : சாற்றிற் சுவைதரும் தண்புனல் நின்குளத் தூற்றெழும் அன்புடன் ஒருங்கு தருதலின் சாற்றினென் நன்றி தவறெனில் விடுக; குழவி : (புன்னகைத்து) பன்னரும் எழில்நலம் கெழுமிய பாவை என்ன முன்னர் இசைத்தவை யன்றோ? யாவை? என நீ இயம்புதி அன்ப வழுதி. : இனியாய் நின்னெழில் எடுத்துயான் மொழியக் கனியும் புலமை கைவரப் பெற்றிலேன்: குழலி : அடக்க வுரைகள் ஆன்றோர் அவைமுன் படித்தல் நன்றாம்; பாவைமுன் எதற்கோ? சீர்பிழைப் பறியாச் சிலம்புடைச் சீறடி, பார்மகள் வருந்தாது பாவிய நன்னடை உடையாய் நீயே உம்பர் அமிழ்தம், நடையால் நீயொரு நற்றமிழ் அன்றி மற்றோர் உவமைச் சொற்காண் கிலெனே குழலி ; (தனக்குள்) கொற்ற இவன்மொழி தூயநற் காதற் பற்றை யுணர்த்தப் பற்றா வாகும். (வழுதியை நோக்கி மற்போர் மறவ சொற்போர் புரியினும் நிற்போர் உளரோ நின்முன், அம்ம; 211