பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 எழிலி எனும்பெயர்க் கேற்ற வுருவினள் தொழுதகும் அவட்குத் தோண்மலர் சூட்டும் கொழுநன் எனும்நிலை வழுதி பெறுமேல் அடிமை ஈங்கிலை அடங்கித் திறைதருங் கொடுமை ஈங்கிலை கொற்றவ நினைக சீயன் நகுதகு மொழிகள் நவின்றனை என்மகள் இகலோன் மகற்கோ இன்றுணை யாவது? மகளைத் திறைதந்து மானங் காக்கவோ? ഖTഞ്ഞrങ്ങ : மாறெனக் கருதின் மற்றொரு வழியுண்டு: ஆறாப் பகைமை அகத்துட் புகைய வஞ்சி வேந்தனும் வலந்தரு மாறனும் வெஞ்சம ராற்ற வேளை நோக்கினர்; மலைக்கோன் துணையொடு மாறனைத் தாக்கின் நிலைத்த வெற்றி நேருவ துறுதி சீயன் : இஃதொரு நல்வழி இதுநமக் குவப்பே வெஃகும் நமதுளம் விரைந்தவன் அறிய வஞ்சி நாடற்கு ... .... இடையில் எழிலி வருகிறாள்) .... ..... வஞ்சி நாடெனும் செஞ்சொல் என்னிரு செவியிற் கேட்டேன். ஆங்கெழும் நினைவெனில் யானும் வருவேன்; ஓங்கிய மலைவளங் கெழுமிய நாடாம் இயற்கை எழில்சூழ் இனிய நாடாம் மயிற்குலம் முதலா மனங்கவர் பறவை வகைவகை விலங்கினம் தொகைதொகை யாக மிகுதருங் காடு செறிதரு நாடாம்: யானவை காணும் அவாவினேன் எந்தாய்: சீயன் : மீனவன் நமக்கு மேவலன்; வஞ்சிக் கோனவன் துணையொடு கூடலன் நாட்டில் வெஞ்சமர் மேற்கொள விழைந்தே மாகி வஞ்சி நாடற்கு வரைக என்றனென்