பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைக்கோன்: அச்சுதன் மலைக்கோன்: காட்சி 9 நாண்மகிழிருக்கை நலமுற அமர்ந்து பூணணி மார்பிற் பொலியும் மலைத்தோள் வேம்பன் நாட்டில் வெள்ளணி காணப் போந்து மறைகள் தேர்ந்து வருவமென் றச்சுதன் தேவற் கறைந்தனன் அவனே. O O. O. O. O. (அமைச்சரை நோக்கி அச்சுதன் தேவநம் அவையில் ஆன்றோர் மெச்சும் புலமை விஞ்சின ராகித் தத்தம் துறையிற் றனித்தனி சிறந்துளர் அத்தகு நிலைகண் டகமிக மகிழ்ந்தனம். பாண்டியன் ஒலை பரிவுடன் உய்த்துளன் வேண்டி யழைத்துளன் வெள்ளணி காண யாமும் செல்ல அவாவினம் அமைச்ச ஆமாம் யாமும் அழைப்பினை மதிப்போம்: மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்னும் உணர்வோ டியங்குவர் மக்கள் மிக்க வளம்பல மேவினும் வாழும் மக்கள் உயிரென மதிக்கும் மன்னன். அரசனைக் குடிகள் அன்பால் விரும்ப அரசன் குடியை அருளால் ஒம்பும்: அருளோ அன்போ அவன்பா லில்லை வெறியன் கொடியன் பிறர்நிலம் விழைவோன்;