பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 வழுதி வழுதி குழலி வழுதி குழலி வழுதி குழலி வழுதி கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 நங்காய் ஆங்கண் நறுமுக விரிமலர் கொங்கு வழியும் கொழுவிய இதழுடன் மென்கால் மோத மெல்லென நுடங்கி நன்பூச் செடியில் நகைப்பது காணுதி அன்னைநற் றோளில் அணைக்குங் காலை நில்லாக் கழுத்தொடு நிமிருங் குழவியின் தலையென அம்மலர் தளர்ந்தசைந் தாடிக் கலையெழில் காட்டும். . . . ii is on to e- கனிமொழிப் பாவாய் போதுமென் றமையாப் புல்லியர் மனம்போற் போது தோறும் போய்ப்புகுந் தலமரும் வண்டினம் நோக்குதி.... .... . வாய்மை வாய்மை பெண்டிரை மலரெனப் பேசும் ஆடவர் உளத்தில் பாங்கை உணர்த்தும் அவைதாம்; கிளைக்குக் கிளைபாய் கிழமைக் கடுவன் மந்தியொ டாடி மகிழ்தல் காண்க இருக்கை மாறினும் இன்றுனை மாறாப் பொறுப்பை அதுதான் பொருந்த உணர்த்தும்: கிளையிற் றத்தங் கிளையுடன் பேசும் இளமைக் கிளிகள் எத்தனை எத்தனை உலகை மறந்தன உறவை நினைந்தன இலவு காவா இளமைக் கிளிகள் (நகைத்துக் கொண்டே) ஆவணத் தெருவில் அவரவர் பொருளைக் கூவும் ஒலியும் கொள்வோர் ஒலியும் பொருளறி யாவணம் ஒருகுர லாகி வருவது போல வகைவகைப் புள்ளினம் ஒருங்குடன் கூடி ஒலிக்கும் பழுமரம் மருங்கில் நிற்கும் மாட்சிமை காணுதி: