உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ിബി பருவழுதி வழுதி வழுதி புலமைப் பெரியர் புகல்பாச் சொற்கள் பலபல பொருள்தரூஉம் பான்மை போல இடுவிதை சிறிதே எனினும் அதுதான் படரிய கிளையொடு படுமர மாகி விழுதுகால் ஊன்ற விரிந்தும் உயர்ந்தும் நிழல்தரும் இடன்தரும் நெடுநாள் நிலைபெறும். நல்கி நல்கி நல்குர வெய்தி அல்குங் காலையும், அரும்பொருள் பெறுவான் உள்ளி வாழுநர்க் குளமுவந் தீயும் வள்ளியோர் தம்மை வழங்கு மாபோல் காய்கனி வருபோர் களிப்புற வழங்கிச் சாய்நிலை பெற்றும் தழையுதிர் வுற்றும் நுடங்கு பூங்கொடி படர்ந்து வளர உடம்பை நல்கும் உயர்மரங் காணுதி: தழுவிய மனைக்குத் தன்னை ஈயும் கொழுநன் தன்மை கூறும் அதுதான். (ஆடும் மயிலைக் காட்டி) மேடெனப் பசும்புல் மேவிய அரங்கில் பாடினி யிசைக்கும் பாலைப் பண்ணின் நீடிய பாடலின் நிறைகுறை போல ஆடும் மஞ்ஞை அகவும் ஆங்கண், (வழுதி வேறுதிசையில் நோக்குவது கண்டு சற்றே புலந்தவளாய்) என்மொழி கொளாஅது யாங்கோ நோக்குதி என்னை எள்ளினை என்னுளம் வருத்தினை: ஆய்தொடி நின்னிசை ஆங்கிருந் தெழுதல் என்னே எனவியந் தென்னுளஞ் செலுத்திக் கொன்னே தளர்ந்தேன். கூவுங் குயிலது. கூவிப் பன்முறை குடியில்தான் முயலினும் மேவிப் பெறுங்கொல் மெல்லியல் நின் குரல்? அளிய தக்குயில் 237