இளம்பெருவழுதி நாகனார் குழலி நாகனார் மெச்சும் புலமை மேலுயர் பண்புடன் அச்சமில் ஆண்மை அடக்கம் முதலன உளனிவன் பெருமைக் குரியன் ஆதலின் இளம்பெரு வழுதி எனும்பெயர் வழங்கி உளங்கனி கொள்ளுவென் உலகும் அப்பெயர் வழங்கி யழைக்கும் வாழ்த்துக அவையே: (அவையோர் வாழ்த்த) சுரும்பார் குழலி தோன்றுக அவையில் (குழலி அவை முன்வர) நறும்பா கெனநீ நாட்டவர்க் குவந்து தரும்பா நவில்க தையால் கேட்குதும்: மரக்கலம் நடுக்குற அலைக்கும் மாகடல் புரக்கும் எனினும் பொங்குங் காலை அழிப்பன பலவே, அகல்வான் மிசையெழில் கொழிக்கும் பாலொலி அளிக்கும் வெண்மதி புணர்ந்தார்க் கின்பம் புரியும் அதுதான் தணந்தார்க் குறுதுயர் தரூஉம் மறுநாள்; நல்லன யாவும் நல்லன வல்ல அல்லன யாவும் அல்லன வல்ல; ஒருகால் இனிதென உணரும் ஒன்றே மறுநாள் துனிதரும் அறிகதில் மனனே, (அவையோர் ஆர்ப்பொலியெழுப்ப) ஞாலத் தியற்கை நவில்டா வழங்கு கோலக் குழலி குடைநிழ லமர்ந்த மாறன் தேவி மனத்தொடு நல்கும் ஆரக் கோவை அவையிற் பெறுக (பரிசில் பெற்று வந்து) ஐய நும்மடி ஆரம் வைத்துத் தையல் என்றலை தாழ்த்தி வணங்குவேன் வாழிய மகளே வாழிய வாழிய ஆழ்கட லுலகின் அமைதரும் இயல்பைச் 245
பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/76
Appearance