பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி நாகனார் பாண்டியன் செம்புலச் பாண்டியன் கடம்பன் பாண்டியன் கணியன் பாண்டியன் ... கொற்றவ கேண்மதி: வெகுளி தவிர்த்து வேண்டுவ செய்கெனப் பகர்ந்ததை மறைக்கும் பதற்றம் உற்றனை: பதறா தறிவாற் பகுத்துணர்; நன்மை சிதறா தாய்ந்து செயற்படு வல்லே. படையெடுத் தாற்றும் பகைப்போர் வெறுப்பேன் படைதடுத் துஞற்றும் நடைதடுத் தறியேன். தடுத்துத் தாங்குந் தானைகொண் டெழுக தொடுத்த போரைத் துணிவுடன் எதிர்க மானம் ஒம்பும் மறத்தமிழ்ப் புலவர் மீனும் வேம்பும்மேம்பட மொழிந்தனர் 'வருபொருளுணர்த்தும் பெருமதி அமைச்சர் தருமொழி யறியத் தவிக்கும் நம்முளம்: பொருவ தென்ப தொருமுடி பாகும் இருவே றில்லை எண்ணித் துணிந்து மறுநாள் மொழிகுவேன் . . ... மண்டமர்க் கடந்து வாகை சூடும் வாளுடைக் கடம்ப . தோகை மகிழுந் தொடர்முகில் ஆர்ப்பின் ஒகையென் மனத்தெழும் ஒருமுர சார்ப்பின், நன்று நன்று நண்ணார் தொலைந்தனர் வென்று மீள்குவம் விரகறி கலியீர் நாளுங் கோளும் நல்லன வாகச் சூழும் மதியாற் சொல்லுக. - - - சொல்லுதும் பகைஞர் புகாவனம் பாண்டி யெல்லையில் அகநிலைப் படையொன் றமைத்தனம் மந்தணம் அதனை மலைக்கோன் எவ்வணம் அறிந்தனன்? மதனுடைப் படையை மடக்கிய தெவ்வணம்?