பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் படைப்புகள்-3 வெள்ளணி காண விழைந்தான் போல மெள்ள நுழைந்து மேவிய மறையறிந் தெள்ளிப் பகைத்தனன் எலியோ புலியை வெல்ல விழைவது? வெறுங்கன வன்றோ? துஞ்சுபுலி இடறிய சிதடன் அவனைப் பஞ்செனப் போரிற் பறந்திடச் செய்குவேன்; ஆழம் அறியா ஆழியுள் ளிறங்க வீழ்மதி யுடையோன் விடுத்தனன் காலை; குன்று முட்டிய குரீஇ யாகிச் சென்று தொலையச் சிந்தை கொண்டனன்; சையத் தருவியிற் சார்தரு சருகெனக் கையற் றேங்கிக் கடிதின் ஒடும்: வழுதி : அரணும் அரண்சூழ் அகப்படை நிலையும் முரணியோர் யாங்ங்ணம் முற்றுந் தெரிந்தனர்? மறையந் தெரிந்து மாற்றலர்க் குரைக்குநர் மறைய நின்றுளர் மன்னவைக் களத்தே கடம்பன் : ஆமாம் யானும் அஃதே நினைந்தனென் தீமா றுளத்தரைத் தெரிந்து கடிகுதும், செம்புலச் : அற்றம் உரைக்குநர் ஈண்டில ராகிலும் ஒற்றான் ஒற்றி ஒர்ந்தது காண்குவம் வழுதி : வேந்தே விடைதரின் வெருவலர் செருக்கிப் பூந்தே னிறைக்கும் பொழில்சூழ் எல்லையிற் றாமே புகுந்தவர் தருக்கினை யடக்கிப் போமா றவரைப் புறமிடச் செய்குவேன்; என்னாட் டெல்லையை இகக்கக் கருதும் ஒன்னார்த் தெரூஉம் உரமிலே னாகின் ஓங்குயர் தமிழின் உரிமை காவாத் தீங்குள் நினையும் சிறிய னாகுக: பிறர்நலம் பேணாப் பேதைமை விஞ்சுங் கரவுளங் கொளுஉம் கடைய னாகுக!