பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோழரும் சளுக்கியரும்

9

முடிசூட்டிவிட்டு அவனைக் கரந்துறையுமாறு அறிவுறுத்திற்று[1]. அவனும் அங்ஙனமே கரந்துறைதலும் சோணாடு சென்ற பரசிராமர் அரியணையில் வீற்றிருந்து அரசாளுவோன் அரசகுலத்தினன் அல்லன் என்பதையறிந்து கணிகையின் புதல்வனாகிய அவனைக் கொல்லுதல் தம் நோன்பிற்கேற்றதன்று எனக் கருதி அந்நாட்டை விட்டகன்றனர். பரசிராமருக்குப் பயந்து கரந்துறைந்த இக் காந்தமன் என்பவனே காவிரியாற்றைக் கொணர்ந்த பெருந்தகையாளன் என்று பழைய தமிழ் நூலாகிய மணிமேகலையின் பதிகம் கூறுகின்றது[2]. பிற்றைநாளில், அப்பரசிராமர் இராமபிரான் திருமணஞ்செய்துகொண்டு மிதிலை மாநகரிலிருந்து திரும்புங்கால் அவரை எதிர்த்துத் தோல்வியுற்று, அரச குலத்தினரை வேருடன் களைதற்கெண்ணிய தமது எண்ணத்தை முற்றிலும் ஒழித்து, மலைச்சாரல் சென்று தவம்புரிந்தனர் என்பது இராமாயணத்தால் அறியக் கிடக்கின்றது.

இனி, இராமாயண காலத்தில் சோழ மன்னருள் ஒருவன் மலையமலையிலிருந்த அகத்தியமாமுனிவரது ஆணையால் மக்களது இன்னலைப் போக்குமாறு, வானத்தின்கண் அசைந்துகொண்டிருந்த மூன்று மதில்களை அழித்தனன் அக்காரணம்பற்றியே சிலப்பதிகாரமும் புறநானூறும்


  1. 6. மணிமேகலை --சிறைசெய்காதை 25- 100
  2. 7. செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்குங் கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட அமர முனிவன் அகத்தியன் றனாது கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை ' -- மணிமேகலை - பதிகம் 9--12.