பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

முதற் குலோத்துங்க சோழன்

கூட்டத்ததிகாரிகள்' என்று கல்வெட்டுக்களும் செப்பேடு களும் கூறுகின்றன. இவர்கள் அரசனால் அளிக்கப் பெற்ற பலவகைச் சிறப்புக்களையும் எய்திப் பெருமையுற்றவர்கள்.

4. அரசியல் அதிகாரிகளும் அவர்கள் கடமைகளும் :--நம் குலோத்துங்கனது ஆளுகையில் பல்வகைத் துறைகளிலும் தலைவர்களாக அமர்ந்து அவனது ஆட்சி நன்கு நடைபெறச் செய்தோர், அமைச்சர் படைத் தலைவர், நாட்டதிகாரிகள், நாட்டையளப்போர், நாடு காவலதிகாரி புரவுவரித்திணைக்களம் வரிப்புத்தகம், பட்டோலைப் பெருமான், விடையிலதிகாரி, திருவாய்க் கேள்வி, திருமந்திர ஓலை, திருமந்திர ஓலைநாயகம் என்ற அரசியல் அதிகாரிகள் ஆவர்.[1]

இவர்களுள், படைத்தலைவர் அரசனது காலாட் படை, குதிரைப்படை, யானைப்படை இவற்றிற்குத் தலைமைவகித்துப் போர் நிகழுங்கால் அதனை வெற்றியுற நடத்துவோர். நாட்டதிகாரிகள் ஒவ்வொரு உள்நாட்டிற்கும் தலைவர்களாய் விளங்குவோர் ; இவர்கள் தம்தம் நாட்டைச் சுற்றிப்பார்த்துக் குடிகளின் நலங்கள், அற நிலையங்கள், நியாயம் வழங்குமுறை முதலானவற்றைக் கண்காணித்து வருவது வழக்கம். நாட்டையளட்போர் ஒவ்வொரு நாட்டையும் கூறுபட அளவிடுவோர். நாடு காவலதிகாரி என்போன் நாட்டிலுள்ள ஊர்களில் களவு, கலகம் முதலான தீச்செயல்கள் நிகழாமல் காத்து வந்த


  1. 5. The Historical Sketches of Ancient Dekhar pages 371, 372, 373 374.