பக்கம்:முதலுதவி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7.மயக்கம் போடுதலுக்குச் செய்யவேண்டிய
முதல் உதவி

சங்கரன்: ஏ, மங்கை! அடே, மணி! இருவரும் வாருங்கள். தமிழரசியை வேண்டும் என்றாலும் இங்கே தூக்கி வாருங்கள். இன்று மயக்கம் ஒருவனுக்கு ஏற்பட்டால் முதலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிக் கூறப் போகிறேன். தலைப்பு சம்பந்தமாகத்தான் நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கலாம். சந்தேகம் இருந்தால் பின் கேட்டுக் கொள்ள வேண்டும்.

மணி: மயக்கத்தின் அறிகுறிகள் யாவை ?

சங்கரன்: கண்களைத் தொட்டால் இமை அசையாது. பாதத்தில் சுரண்டினால் உணர்ச்சி இராது. கை,     கால்களைத் துக்கினால் இரும்புக் குண்டு போன்று கனமாய் இருக்கும். அவைகளை உயரத்தில் இருந்து விட்டுவிட்டால் அவை தொப்பென்று கீழே விழும். செத்த பிணம் மாதிரியே இருப்பான். இவைகளே மயக்கங் கண்டவனுக்குக் காணும் அறிகுறிகளாம்.

மங்கை: எனது சிவகாமி அத்தைக்கு முன்னால் இது ஏற்பட்டது என்று கூறுவர். ஆகவே இதற்குப் பொதுவாய் செய்ய வேண்டிய முதல் உதவி யாது ?

சங்கரன்: முதலில் வழக்கம்போல் வைத்தியருக்கு ஆள் அனுப்பவேண்டும். மயக்கத்தில் இருப்பவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/69&oldid=1146485" இலிருந்து மீள்விக்கப்பட்டது