பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

படுகின்றது. மிகச் சிறந்த நூலகத்தையும் காணலாம்; சிறப்பில்லாத நூலகத்தையும் சிற்றூர்களிலே காணலாம்.

நகர நூலகங்கள், சில கட்டடங்கள் , அதிகாரிகள், ஓரளவிற்கு அதிகமான நூல்கள் ஆகியன பெற்றுப் பணி புரிகின்றன. இவற்றுக்கு மாறாக, சிற்றூர் நூலகங்கள், பல கிளைகள் மூலம் நூல் வழங்க வேண்டியுள்ளன. அக்கிளைகள் சிற்றூர்கள் முழுதும் பரவிக் கிடக்கின்றன. ஒவ்வொரு பள்ளியாசிரியரும் ஊதியமற்ற நூலகத்தாராக இருப்பர். அவர்களுக்குச் சிற்றூர் நூலகங்கள் நூல்களை அனுப்பும். அவற்றை அவ்வாசிரியர்கள் தத்தம் பள்ளிக் குழந்தைகளுக்கும். மக்களுக்கும் வழங்குவர். பள்ளிகளைப் போன்றே, மன்றங்கள் சங்கங்கள், கழகங்கள், கோயில்கள், கடைகள், தனிப்பட்ட வீடுகள் ஆகியவற்றின் மூலம் நூல்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு நூல் வழங்கும் வழங்கு நூலகங்கள் ஏறத்தாழ இருபதாயிரம் உள்ளன.

இம்முறையினால் ஏற்படும் பயன் அளவிற் சுருங்கியதே. சிற்றூர் நூலகங்களிலே உள்ள நூல்களின் எண்ணிக்கை, நாமாகவே நூல் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு ஏற்றதன்று; அத்துணைச் சிறியது. மேலும், ஒரு வாரத்திலே இரண்டொரு நாள் தான் நாம் நூல்கள் எடுக்க முடியும். நமக்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நூல் வேண்டுமானல், அது பிற கிளைகளிலிருந்து அஞ்சல் மூலம் வரும் வரை காத்திருக்கவேண்டும். அது உடனே வருவதும் வராததும் சூழ்நிலையைப் பொறுத்தது.