பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

சில சிற்றூர்களிலே நூலக வண்டிகள் நன்கு பயன்படுத்தப்படுகின்றன. பிற சிற்றுார்களிலும்கூட இவை நன்கு பயன்படுத்தப்படலாம். ஏறத்தாழ 2000 நூல்கள் கொள்ளக் கூடிய நூலக வண்டிகள், பொழுதும் சுற்றிக்கொண்டே இருக்கும்.அவை சுற்றுவதற்கெனக் கால அட்டவணை ஒன்று உண்டு. அதன் மூலம், இன்ன நாளில் இன்ன நேரத்தில் நூலக வண்டி இன்ன சிற்றூரில் நிற்கும் என்பதை நாம் முன்பே எளிதில் அறிந்துகொள்ளலாம். ஒரு சிற்றூரில் நூலக வண்டி வந்து நின்றால், அவ்வூர் நூலக அதிகாரி, தம்மிடமுள்ள நூல்களைச் சரிபார்த்துச் சேர்த்து அளித்துவிட்டுப் புத்தம் புதிய நூல்களைத் தேர்ந்தெடுத்தும் கொள்வார். நூலக அதிகாரி தருவன நல்ல நிலையில் சிதையாமல் இருக்குமானால், நூலக வண்டியிலுள்ள புதிய நூல்களோடு சேர்க்கப்பட்டுப் பிற இடங்களுக்குக் கொண்டு செல்லப்படும். மறுபடியும் தைக்கப்பட்டுச் சீராக்கப்பட வேண்டிய சிதைந்த நூல்கள் தலைமை நூலகத்துக்குக் கொண்டு செல்லப்படும். வாய்ப்பற்ற இடங்களிலுள்ளவர்களுக்காக அவர் தம் நண்பரோ, உறவினர்களோ நூல்களை -அடுத்த முறை வரும்வரை படிக்க வேண்டிய நூல்களை வண்டியிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

நகரங்களிலும், சிற்றூர் நூலக முறையிலே பல கிளை நூலகங்கள் வாடகைக் கட்டடங்களிலும், சொந்தக் கட்டடங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நூலகங்கள் வாரத்தில் ஓரிரு நாட்களே திறந்து வைக்கப்படும். இங்கே வேலை செய்வோர், ஒன்று தொண்டராக இருப்-

நூ-4.