பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51


மக்களிடையே சிலர், சுழல் நூலக வண்டியிலே சேர்க்கப்படாத நூல்களை வேண்டி எழுதும் கடிதங்களுக்கு ஆராய்ந்து தலைமை நூலக அதிகாரிகள் விடை எழுதுகின்றனர். உள்ளூர் நூலகங்களால் தீர்க்கப்படாத சிக்கல்களும் தலைமை நூலகத்துக்கு அனுப்பப்படும். தலைம நூலகத்திலே ஒரு பெருந்துறை. இருக்கும். அதுவே கிளை நூலகங்கட்கு வேண்டிய நூல்களையும், வேண்டாத, ஆனால் சிலரே வேண்டுகின்ற நூல்களையும் பொறுக்கி யெடுக்கும். எனவே நகருக்கு வருவோர் எவரும் இந்தத் துறைக்கு வரலாம். சிற்றூர் நூலகங்களும், நகர நூலகங்களும் நூலக மாவட்டத்திலே இணைப்புண்டிருக்கின்றமையால், எவரும் தாங்கள் எண்ணிய நூலை, அவர் எங்கிருப்பினும் பெறலாம்.

இதுகாறும் கூறியன சிற்றூர் நாலகங்களின் பொதுவான நடைமுறைகளாகும். இவற்றிலேயே சிறப்பாகக் குறிப்பிடத்தக்க பெருமையுடைய சிற்றுார் நூலகங்களும் உண்டு. அவை செய்துவரும் பணியும் சிறப்பானவை: குறிப்பிடத்தக்கவை. அவற்றுக்குச் சிறப்பும் மதிப்பும் அளிக்க வேண்டியது அறிஞர் கடன்; ஏன்? மக்கள் கடன். அத்தகைய நூலகங்கள் இயங்கும் இடங்கள் சில பின்வருமாறு :

டெர்பிசையர், டிவான்சையர், கியர்போர்டு சையர், கென்ட், லங்காசையர், மிடில் செக்ச், நாட்டிங்காம் சையர். இவை இங்கிலாந்திலுள்ளன. இனி வருவன ச்காட்லாந்தில் உள்ளன :-ஆயிர்சையர், ப்விசையர், லனார்க்சையர்.