பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

முழுமையான நூல் பட்டியல் 2036ஆம் ஆண்டில்தான் முடியும். அப்பொழுது நூல் தட்டுகளின் நீளம் எண்பது மைலாகிவிடும்.

இத்தகைய மிகப் பெரிய நூலகத்தை நிறுவிய பெருமை சர். அந்தோணி பானிசி என்பவரைச் சேரும். பிரிட்டன் பொருட்காட்சி சாலை கி. பி. 253-ல் தொடங்கிய பொழுது, தாவர விஞ்ஞானியும், மருத்துவரும் ஆகிய சர் ஆன்சுலோன் (Sir Hanslone) என்னும் பெருமகனர் தாம் சேர்த்து வைத்திருந்த நூல்கள், கையெழுத்தேடுகள், நாணயங்கள், ஓவியங்கள், பதக்கங்கள் ஆகியவற்றை நாட்டு மக்களுக்குப் பயன்படுமாறு குறைந்த விலக்கு அரசினர்க்கு அளித்து அழியாப் புகழ்பெற்ருர், இவர் அவ்வாறு உதவ நினைத்தபொழுது, பாராளுமன்றம் அவற்றை வாங்குதற்கு முடிவு செய்தது. அவற்ருேடு கார்லியன் கையெழுத்தேடுகளும் (Harleian MSS.) சேர்க்கப்பட்டன. இதன் பொருட்டும், நூலகம், பொருட்காட்சி ஆகியவற்றின் செலவிற்காகவும் ஓர் இலட்சம் பவுன்கள் ஒதுக்குவதென்று பாராளுமன்றம் முடிவு செய்தது.

மாண்டேகு இல்லத்திலே நூலகமானது கி. பி. 1759 ஆம் ஆண்டு, சனவரி மாதம், பதினைந்தாம் தேதியில் ஏற்படுத்தப்பட்டுப் பொதுமக்களுக்காக அன்றே திறக்கப்பட்டது. 1768ஆம் ஆண்டில் மூன்றும் சார்ச் மன்னர் அரச நூலகத்தை அளிக்கவே, இடம் போதாத காரணத்தினால், இன்று கவினுடன் விளங்கும் நூலகக் கட்டடத்தின் முதற்பகுதி கி. பி. 1838-ல் கட்டி முடிக்கப்பட்டது. இந்நூலகத்தின் உலகப் புகழ்வாய்ந்த படிப்பகம் (Reading