பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருத்துவமாமணி * 129 பகயம்: இது தமிழ் மருத்துவத்தில் மிகவும் புகழ் பெற்றது. இரும்பு, வெள்ளி, தங்கம், செம்பு முதலிய உலோகங்கள் ஒன்பது. முத்து, மணி, பவழம் முதலிய இரத்தினங்கள் ஒன்பது. வீரம்,பூரம் முதலிய பாஷாணங்கள் ஒன்பது. இவற்றை முறையே நவலோகம், நவரத்தினம், நவபாஷாணம்" என்று கூறுவர். இந்த மூவொன்பது இருபத்தேழையும் பசுமமாக்கும் முறை சித்த மருத்துவத்தில் மட்டுமே உண்டு. பிற மருத்துவமுறைகளில் இவற்றில் சில பசுபமாகச் செய்யப்பெறும். எனினும் அதன் மூலம் சித்த மருத்துவமுறையாகவே அமைந்திருக்கும்." அலபதி முறையில் ஆங்கிலேயர்கள் இவற்றில் சிலவற்ளைப் பசுபமாக்குகின்றனர். ஆனால் விலையுயர்ந்த இயந்திரத்தில் அதிகச் சம்பளம் வாங்குகின்றவர்கள் கண்காணிப்பில் பெரும் பொருட்செலவில் அவை செய்யப் பெறுகின்றன. சித்த மருத்துவ முறையிலோ விரட்டிகளைக் கொண்டு மூலிகைச் சாறுகளைத் தடவி, எளிய முறையில், குறைந்த செலவில் இவை அனைத்தும் பசுபமாக்கப் பெறுகின்றன. உணவே மருந்து சித்த மருத்துவத்தில் உணவும் மருந்தும் ஒன்றாக அமைந்துள்ளமை வியப்பிற்குரியது. 'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு (குறள் 942) என்பார் வள்ளுவப் பெருந்தகை. எப்பொழுது? உண்ட உணவு செறிமானம் ஆனபிறகு உண்டால்'; 'மருந்து' என்ற அதிகாரத்தில் (95) மருந்தைப் பற்றிப் பேசாமல் உணவைப் பற்றியே பேசுகின்றார். 'மருந்து' என்ற சொல்லுக்கு மருத்துவப் -o 1. இராமநாதபுரத்திற்கு அருகில் 2 கல் தொலைவில் 'தவ பாசாணம்' என்ற தீர்த்தம் (கடல்) ஒன்று உண்டு. அதில் மூழ்கினால் பாவம் கரைந்து விடும் என்பதாக நம்பிக்கை, 1948 (ஏப்ரல் மே)யில் நான் குடும்பத்துடன் திருத்தலப் பயணம் (ஒரு மாதம்) மேற்கொண்டபோது இதில் நீராடியதாக தினைவு. 2. (1941-50) நான் துறையூசில் பணியாத்திய காலத்தில் உலக ஊழியனார் என்று புலவர் பவழபசுபம் செய்யும் முறையைக்கத்துக்கொடுத்தார்.ஆறு ஆண்டுகள் (1947-1953) அதனைத் தேனில் கலந்து உண்டேன்.