பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. புலவர்களான சித்தர்கள் மிக உயர்ந்த பொருளைத் தந்திருப்பது சிந்திக்கத்தக்கது.

      • * స్థ

மறுப்பதுடல்நோய் மருத்தெனலாகும் மறுப்பதுளநோய் மருந்தென சாலும் மறுப்ப திணிநோய் வாரா திருக்க மறுப்பது சாவை மருந்தெனலாமே என்ற பாடல் இதனை வலியுறுத்துகின்றது. மக்களின் உண்ணும் உணவும் புரியும் செயல்களுக்கு ஒவ்வாமையாலே உடலிலுள்ள வளி, தீ, நீர் (வாதம், பித்தம், கபம்) ஆகிய மூன்றும் தத்தம் இயற்கையளவில் மிகுந்தும் குறைந்தும் நோய் உண்டான காலத்து நம் முன்னோர்கள் அந்நோய்களை வெயிலிற் காய்தல், எண்ணெய் முழுக்கு, பட்டினியிருத்தல், உணவு முறைகளில் மாற்றம் செய்தல் போன்ற இயற்கை யானதும் எளிதானதுமானபக்குவங்களால் அவற்றைப்போக்கி வந்தனர். இவை போதாதெனில் பச்சிலை, கொடி, வேர், கிழங்கு, பூ, காய், கனி, வித்து முதலானவற்றாலாகிய சாறு, குடிநீர், எண்ணெய், இலேகியம் போன்ற மருந்துகளைக் கொடுத்தனர். இவற்றாலும் தீர்க்கவியலாத நோய்களுக்கு உப்புகள், ரசகத்தக பாடானங்கள் போன்றவற்றால் நீறு, செந்தூரம் போன்ற மருந்துகள் செய்தனர். அறுவை, குருதி வாங்கல் போன்ற பல முறைகளும் இருந்து வந்தனவாக நூல்கள் மூலம் அறிய முடிகின்றது. இவை தவிர, கடுகு, மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள், சுக்கு, திப்பிலி முதலிய கடைச்சரக்குகள் எல்லாம் மருந்து; எள்ளு, கடலை, இலுப்பை, வேம்பு முதலிய எண்ணெய் வகைகளெல்லாம் மருந்து; சுருக்கமாக உரைக்கின் பசுவின் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் அனைத்துமே மருந்து: மருந்தாக அமைகின்ற இந்த உணவு வகைகளே சித்த மருத்துவ 3. இவை பாவும் ஆயர் பாடியையும் அங்கு வளர்த்த கண்ணனையும் நீனைக்கச் செய்கின்றன்.