பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 ல் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. வந்தது. அதைக் கண்ட உழவன் பயந்து போய் 'சிறுவன் சுட்டித்தனமாக விளையாடினால் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே. அவனை அழைத்து உங்கள் அருகில் வைத்துக் கொள்ளுங்கள்’ என்றான். அதனைக் கேட்ட அந்த ஆள் சிரித்து 'அது பையன் அல்ல, பெண்” என்றார். அப்படியா? நீங்கள் தான் அந்தப் பெண்ணின் தந்தையா?” என்று கேட்டான் அந்த உழவக் குடிமகன். அவர், "இல்லையில்லை; நான் அந்தப் பெண்ணுக்குத் தந்தை அல்ல, தாய்" என்று சொன்னவுடன் உழவப் பெருமகன் அடைந்த வியப்புக்கு எல்லையே இல்லை. பெண்ணாக ஆணும், ஆணாகப் பெண்ணும் வேற்றுமை தெரியாத அளவுக்கு நடையுடை பழக்கங்களை மாற்றி நடந்து கொள்ளும் வேடிக்கையைப் பம்பாயில் (மும்பை) பார்த்து விட்டு வந்து அந்த உழவக்குடிமகன் அவன் ஊர் வந்ததும் அவன் அனைவரிடமுமே அதைச் சொல்லிச் சொல்லிச் சிரித்தான். 9. தென்னை மரத்தில் புல் பிடுங்கியது". ஒருவன் அயலான் வீட்டுத் தென்னந் தோப்பில் தேங்காய் பறிக்க ஏறிக் கொண்டிருக்கும் நிலையில் தோட்டத்திற்கு உரியவன் கண்டு கொண்டான். இவன் வருவதைக் கண்ட திருடன் தேங்காய் பறிக்காமல் கீழே இறங்கி விட்டான். தோட்டக்காரன் கேட்டான்: "எதற்காக என் மரத்தில் ஏறினாய்?" என்று. திருடன் 'கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க” என்று பதிலுரைத்தான். 'தென்னை மாத்தில் புல் இருக்குமா?" என்று தோப்புக்காரன் வினவ, "இல்லாமல் இருப்பதைக் கண்டுதான் இறங்கி விட்டேனே' என்று விடை கூறிப் போய்விட்டான். 22. அதிவுக்கதைகள்- பக் 140