பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுபவதாயகர் * 159 இப்படியும் சில திருடர்கள். அவர்கள் தங்கள் திறமையைச் செயலில் மட்டுமல்ல, பேச்சிலும் காட்டிக் கொண்டிருப்பர். 10. சிந்தனை செல்லும் வழி’: சிந்தனை ஒரு செல்வம். மக்கள் சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது. அண்ணலின் அதிராக் கொள்கை. சிந்திக்கத் தெரியாதவன் வறுமை வாய்ப்பட்டவன். இறைவனின் அருளைப் பெறவும் சிந்தனை தேவை என்பதை அருளாளர் ஒருவர் இப்படிக் கதறுவார்: 'இறைவா, உன்னைச்சிந்தித்தறியேன். அரைக்கணமும் தரிசித்தறியேன். ஒரு நாளும் வந்தித்து அறியேன். மறவாதே வழுத்தியறியேன். கனவிலும் எனக்கு உன் அருள் எப்படிக் கிடைக்கும்?' என்று. ஆனால் பலர் இன்று சிந்திப்பதே இல்லை. சிலர் குறுக்கு வழியில் சிந்திக்கின்றனர். அத்தகைய நிகழ்ச்சிகளில் ஒன்று. - ஏணி மரத்தின்மீது ஏறி சுவரில் ஆணி அடிக்கின்றான் ஒருவன். மற்றொருவன் கீழே நின்று ஏணி மரத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றான். சற்று நேரம் அதிகமாகவே, கீழே நிற்பவன் அவனை நோக்கி ஆணி இறக்கவில்லையா? காங்கிரீட் சுவரா?" - என்று வினவினான். 'மண் சுவர்தான். விரைவில் அடித்து விடுகின்றேன்' என்று சொல்லி மீண்டும் வேகமாகச் சுத்தியால் அடிக்கத் தொடங்கினான். ஏணியைப் பிடித்துக் கொண்டிருந்தவன் நன்றாக மேலே பார்த்துவிட்டு 'கொண்டையை சுவரில் வைத்துக் கூர்ப்பக்கமாக சுத்தியால் அடிக்கிறாயே' என்று கோபித்தான். அதற்கு அவன் சிந்தித்து விட்டுச் சொன்னான். 'என் மேல் தப்பில்லை. ஆணிக் கம்பெனிக்காரன் கூர் இருக்க வேண்டிய 23. அறிவுக்கதைகள் - புக 137