பக்கம்:முத்தம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

'தாவாச் சிறு மான்; மோவா அரும்பு' போன்ற பத்மா ஆர்வமாகச் சொன்னாளா புதுக் கருத்தை! 'அதிசயம்!' என்று வியந்தார்கள் சிலர். 'அதிகப் படிப்பின் வினை' எனப் புகன்றார்கள் பலர். 'கன்னி யொருத்தி ஆண்களுடன் தாராளமாகப் பழகிப் பேசிச் சிரித்து, அன்பன் ஒருவனோடு புனிதநட்பு வளர்த்து வாழ்ந்தாலும், சதைப் பசி வளர்க்காமல், தெய்வவாழ்வு பயிலமுடியும் என்கிறாள். அவ்விதம் செய்வேன் என்று சூளுரைக்கிறாள். மூளையிலே கோளாறு தான். வேறு என்ன? ரொம்பப் படித்துப் படித்து, பித்தம் சிரசுக்கு ஏறி விட்டது' என்று பத்திரம் வழங்கினார்கள்.

பத்மா தவக் கோலம் பூணவில்லை. திரிசடைக் தனங்கள் பயிலவில்லை. மொட்டையோ முக்காடோ கொள்ளவில்லை! முகமூடி மட்டுமோ, முழுத் திரைத்துணையோ தேடவில்லை! அவள் அழகு நிலா. அதன் குளுமை எங்கும் சிதறிச் சிரித்தது. அவள் வனப்பின் நாண்மலர். அதன் மணம் எங்கும் பரவியது. அவள் இளமையின் அருவி. அதன் சலசல நாதம் எங்கும் இனிய கீதமாகத் தள்ளிக் குதித்தது. அவளது மின்கொடி மேனியை பெங்கால் ஸில்க்கும், பாலிஷ் பட்டாடைகளும் தான் அணி செய்தன. தைலம் நீவிக் கறுமை பூண்டு நெளி நெளியாய்த் துவளவிட்ட கூந்தல் ஒற்றைத் தனிச் சடையாய் முதுகிலே புரளும். சில சமயம் இரட்டைப் பின்னலாக மின்னும்.தனிச் சடை கழுத்தை அணைத்து தோளில் துவண்டு முன்வந்து படிந்து மார்பிடைத் தூங்கும். சிரிக்கும் கண்கள் சிரிப்போடிப் பேசும் உதடுகளின் அசைவுகளுக் கேற்பத் தனியொளி காட்டி உணர்வு நடம்பயிலும். அவள் எதிரே வரும் போது எல்லோர் கண்களையும் இழுக்கும் புஷ்பம். போகும் போதோ எதிர்ப்பட்டுத் தாண்டிச் செல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/20&oldid=1496235" இலிருந்து மீள்விக்கப்பட்டது