பக்கம்:முத்தம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

டாள். அவளுக்கு ஆடிப்பாடத் தெரியாது. தெரிந்திருந்தால் “ஆனந்தமென் சொல்வேனே!' என்றோ, வேறு எப்படியோ, கத்திக் கூத்தாடி யிருப்பாள்!


5

குதித்தபடி மாடிப்படி ஏறிக் கொண்டிருந்தாள் குமரி பத்மா, ஒரு நாள்-தன் இன்பத்தில் தானேயாகிச் சூழல் மறந்து குதித்துக் குதித்து முன்னேறும் மைனா போல திடீரென்று கொதிப்புற்று நிற்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டு விட்டது. “எதிரே ஆள் வருவது தெரியலே? கண் என்ன குருடா? காலித்தனம்' என்று சூடாகக் கொடுக்க வேண்டும். 'ம்ருகம்!' என்று அழுத்தம் திருத்தமாக அறிவித்து விட வேண்டும் என்று உளம் கொதித்துத் தலைநிமிர்ந்தாள் பத்மா. மேலிருந்து வந்து, மாடிப்படித் திருப்பத்தில் எதிரே வரும் எழிலியைக்காணாமல் மோதிவிட்டு, பின் தீயை மிதித்தவன் போல் விலகி நின்றவனை, அவன் குழப்பத்தைக் கண்டவுடன் கண்ணகி அவதாரம் கருணை தவழ் முகத்தினள் ஆயினாள். கடுகடுத்த முகத்திலே நிலவுப் புன்னகை பளிச்சிட்டது.

'ஓ! நீங்களா!' என்றாள், தேன் குரலை இன்னிசையாய் இழைய விட்டு.

குழப்பம் அதிகக் கலவரமாக, என்னசெய்வது; என்ன சொல்வது; அவள் என்னவாவது எண்ணிக் கொள்வாளே என்று திகைத்து 'மன்னிக்கனும்... வருத்தம்... நான் நான் வந்து......' என்று சரியான சொற்களுக்காகத் திணறித் தடுமாறினான் அந்த 'ஓ, நீங்களா?' ஆகி விட்ட ஆசாமி.

அவள் அவன் தடுமாற்றம் கண்டு அதிகம் சிரித்தாள். 'பரவாயில்லே, மிஸ்டர் ரகுராமன். தப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/22&oldid=1496120" இலிருந்து மீள்விக்கப்பட்டது